தேசிய திரைப்பட விருது விழா சர்ச்சை;கலைஞர்களை மதிக்காத பாஜக அரசு!

 

தேசிய திரைப்பட விருதுகளை ஜனாதிபதி 11 பேருக்கு மட்டுமே வழங்குவார் என அறிவிக்கப்பட்டுள்ளதற்கு விருது வென்றவர்கள் அதிருப்தி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளனர்.

 

தேசிய திரைப்படவிருதுகள் கடந்த மாதம் அறிவிக்கப்பட்டன. இதற்கான விருதுகளை வழக்கமான ஜனாதிபதி அனைவருக்கும் வழங்குவார். ஆனால், இம்முறை அடையாளமாக 11 பேருக்கு மட்டுமே ஜனாதிபதி விருது வழங்குவார், மற்றவர்களுக்கு தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை மந்திரி ஸ்மிருதி இராணி விருதுகளை வழங்குவார் என தெரிவிக்கப்பட்டது.

இதற்கு விருது வென்றவர்கள் மத்தியில் அதிருப்தி எழுந்துள்ளது. விருது பெற உள்ள 69 பேர் திரைப்பட விழாவில் பங்கேற்க போவதில்லை கடிதம் எழுதியுள்ளனர். அந்த கடித்தத்தில், “தகுந்த நெறிமுறைகளுடன் செயல்படும் தேசிய விருது வழங்கும் விழாவைப் பற்றி உரிய முறையில் எங்களிடம் தெரிவிக்காத நிகழ்வு எங்களை ஏமாற்றியது போல உணரச் செய்துள்ளது. மேலும் தேசிய விருது வழங்கும் விழாவின் 65 வருட பாரம்பரியத்தை சில நிமிடங்களில் கேள்விக்குள்ளாக்கியுள்ளதும் துருதிஷ்டவசமான செயல்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், “எங்கள் மனக்குறையை போக்க ஒரு பதில் கிடைக்காத சூழ்நிலையில் தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் பங்கேற்க நாங்கள் விரும்பவில்லை. இதற்காக இந்த விழாவை கலைத்துறையினர் புறக்கணிக்கின்றோம் என கருத்தில் கொள்ள தேவையில்லை” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top