காவிரி மேலாண்மை வாரியம்:மேலும் 2 வார கால அவகாசம் கோரி மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் மனு

 

காவிரி நீர் பங்கீடு தொடர்பாக நடுவர் [தீர்ப்பாயம்]  மன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, கடந்த பிப்ரவரி 16-ந்தேதி தீர்ப்பு வழங்கியது.

 

தனது தீர்ப்பில் கர்நாடகம் தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நீரின் அளவை குறைத்த சுப்ரீம் கோர்ட்டு, ஏற்கனவே நடுவர் மன்றம் [தீர்ப்பாயம்]வழங்கியுள்ள இறுதித்தீர்ப்பை நிறைவேற்ற ‘ஸ்கீம்’ (செயல்திட்டம்) ஒன்றை 6 வார காலத்துக்குள் ஏற்படுத்த வேண்டும் என்று மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. இதற்காக எந்த சூழ்நிலையிலும், எந்த விதமான கால நீட்டிப்பும் வழங்கப்பட மாட்டாது என்றும் சுப்ரீம் கோர்ட்டு தனது தீர்ப்பில் குறிப்பிட்டு இருந்தது.

 

நடுவர் தீர்ப்பாயம் தனது இறுதித் தீர்ப்பில் நீர் பங்கீட்டை மேற்கொள்ள காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்குமுறை குழு ஆகியவற்றை அமைக்க வேண்டும் என்று கூறி இருந்ததால், இந்த இரு அமைப்புகளையும் ஏற்படுத்த வேண்டும். இந்த இரு அமைப்புகளையும் செயல்படுத்த ‘ஸ்கீம்’ ஒன்றை அமைக்க வேண்டும் என  சுப்ரீம் கோர்ட்டு தனது தீர்ப்பில் குறிபிட்டுள்ளது.

 

இதன் அடிப்படையிலேயே, காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்று தமிழக அரசும், அரசியல் கட்சிகளும் மத்திய அரசை வற்புறுத்தி வருகின்றன. இந்த கோரிக்கையை வலியுறுத்தி விவசாய அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டன.

 

6 வார காலெக்கெடு முடிந்த நிலையில் தமிழக அரசு சார்பில் மத்திய அரசு  மீது  நீதிமன்ற அவமதிப்பு வழக்கு  தொடரப்பட்டது. தமிழக அரசு தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு உட்பட 4 வழக்குகளை விசாரித்தது.

 

 

மாதந்தோறும் காவிரியில் இருந்து எவ்வளவு நீர் திறந்து விட வேண்டுமோ அதை செயல்படுத்த வேண்டும்”  காவிரி வழக்கில் கர்நாடக மாநிலத்திற்கு சுப்ரீம் கோர்ட்  உத்தரவிட்டு உள்ளது. “மேலாண்மை வாரியம் என காவிரி நடுவர் மன்றம்  தெரிவித்திருந்தாலும் எங்கள் தீர்ப்பில் செயல்திட்டம் என குறிப்பிட்டுள்ளோம்.

 

ஸ்கீம் பற்றி தற்போது எதுவும் கூற முடியாது; வரைவு அறிக்கைக்குப் பின்பே முடிவு எடுக்கப்படும். ஸ்கீம் என்பது காவிரி மேலாண்மை வாரியம் என நாங்கள் தீர்ப்பில் குறிப்பிடவில்லை. என சுப்ரீம் கோர்ட் கூறியது.

 

மார்ச் 31 ஆம் தேதிக்கு முன்னதாக சுப்ரீம் கோர்ட்டை  அணுகி காவிரி மேலாண்மை வாரிய விவகாரம் தொடர்பாக விளக்கம் கேட்காதது ஏன்? உங்களின் கடமைகளில் இருந்து நீங்கள் தப்பிக்க முடியாது என சுப்ரீம் கோர்ட் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்தது. நடுவர்மன்ற தீர்ப்பை இணைத்தே நாங்கள் தீர்ப்பு வழங்கியுள்ளோம் என கூறியது. வரைவு செயல் திட்டத்தை மே 3 ந்தேதிக்குள் உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசுக்கு  தாக்கல் செய்ய வேண்டும். என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.

 

இந்த நிலையில் காவிரி நதிநீர் வழக்கில் கால அவகாசம் போதவில்லை மேலும் 2 வாரம் கால அவகாசம் கோரி  மத்திய அரசு  சுப்ரீம் கோர்ட்டில், மனு தாக்கல் செய்து உள்ளது.  காவிரி தொடர்பான செயல் திட்டத்தை சமர்பிக்க மேலும் 2 வார கால அவகாசம் தேவை என கூறி உள்ளது.  இந்த  கோரிக்கை மனுவை விசாரணைக்கு ஏற்றது உச்சநீதிமன்றம். மே. 3 ஆம் தேதி காவிரி வழக்கு விசாரணைக்கு வரும்போது மனு விசாரிக்கப்படும் என நீதிபதிகள் கூறினர்.

 

மத்திய அரசும் உச்சநீதிமன்றமும் சேர்ந்துகொண்டு தமிழர்களுக்கு காவிரி விவகாரத்தில் தீங்கு செய்கிறது.

 

6 வார காலத்துக்கு பிறகு  எந்த சூழ்நிலையிலும், எந்த விதமான கால நீட்டிப்பும் வழங்கப்பட மாட்டாது. என்று தீர்ப்பில் சொல்லிவிட்டு மத்திய அரசு கேட்ட கால அவகாசத்திற்கான மனுவை ஏன் உச்சநீதிமன்றம் ஏற்றது? தன்னுடைய தீர்ப்பை தானே கடைபிடிக்கவில்லை என்றால் பிறகு யார்தான் கடைபிடிப்பார்கள்.!

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top