நீட் தேர்வு மைய ஒதுக்கீட்டு வழக்கு: சிபிஎஸ்இ நிர்வாகம் மீது இன்று விசாரணை

 

 

நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம் இந்திய அளவில் தமிழகம் மட்டும்தான் முன்னணி வகுத்து போராடுகிறது.சமூகநீதி சார்ந்த இட ஒதுக்கீடு தமிழகத்தில் கல்வியிலும் வேலையிலும் கடைப்பிடித்து வரும் மாநிலம் ஆகையால், நீட் தேர்வுக்கு மத்திய அரசு சொல்லும் எந்த போலியான காரணமும் எடுபடவில்லை.தற்போதைய பாஜக வின் பினாமி அரசுபோல் செயல்படும் தமிழக அரசை பயன்படுத்தி உச்ச நீதிமன்றத்தின் துணையோடு தமிழகத்தில் நீட் தேர்வை கொண்டுவந்து விட்டார்கள்.

 

அதிலும் பல குளறுபடிகள், அதை எதிர்த்து வழக்கு என தமிழகம் நீட்டுக்கு எதிரான போராட்டத்தை தொடர்ந்துகொண்டே  இருக்கிறது

 

நீட் தேர்வு எழுதவுள்ள தமிழக மாணவர்களுக்கு கேரளா மற்றும் ராஜஸ்தானில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், சிபிஎஸ்இ நிர்வாகம் விரிவாக பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

சென்னை உயர் நீதிமன்றத்தில் வேளச்சேரியைச் சேர்ந்த வழக்கறிஞர் காளிமுத்து மயிலவன் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: நீட் தேர்வு வரும் மே 6-ம் தேதி நடைபெறவுள்ளது.

 

இந்தத் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள தமிழகத்தின் தென் மாவட்ட மாணவர்களுக்கு கேரளாவிலும், ராஜஸ்தானிலும் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டிருப்பதால், மாணவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

 

இந்தத் தேர்வு மையங்கள் ஒதுக்கீடு என்பது கணினி மூலமாக நடைபெற்றுள்ளது என்பதால் இதில் மாற்றம் செய்ய முடியாது என சிபிஎஸ்இ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

 

ஆங்கிலம், தமிழ், மராட்டியம், தெலுங்கு என 11 மொழிகளில் நடத்தப்படும் இந்தத் தேர்வுக்கு வேறு மாநிலத்துக்குச் செல்லும் தமிழக மாணவர்களுக்கு தமிழ் வழி கேள்வித்தாள் கிடைப்பது கேள்விக்குறியாகி விடும். இதனால் மாணவர்களுக்கு தேவையற்ற மனஅழுத்தம் ஏற்படும்.

 

எனவே தமிழக மாணவர்களுக்கு தமிழகத்துக்குள்ளேயே தேர்வு மையங்களை ஒதுக்க சிபிஎஸ்இ நிர்வாகத்துக்கு உத்தரவிட வேண்டும்.

 

இவ்வாறு அதில் கோரியிருந்தார். இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் ஹூலுவாடி ஜி.ரமேஷ் மற்றும் எம்.தண்டபாணி ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது.

 

மூத்த வழக்கறிஞர் ஆர்.தியாகராஜன் ஆஜராகி வாதிட்டார். இதையடுத்து நீதிபதிகள், இந்த வழக்கில் ஏப்.27-க்குள் (இன்று) சிபிஎஸ்இ நிர்வாகம் இதுதொடர்பாக விரிவாக பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையைத் தள்ளி வைத்து இருந்தனர் இன்று இந்த வழக்கு வருகிறது சிபிஎஸ்இ நிர்வாகம் மாற்றி கொடுக்குமா இல்லை தேர்வை தள்ளி வைக்குமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

 

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top