ரயில் மறியல் போராட்டம்; வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் தீர்ப்பை திரும்பப் பெறு!

 

வன்கொடுமை தடுப்புச்சட்டத்தை நீர்த்துபோகும்படி செய்திருக்கும்
சுப்ரீம் கோர்ட்டின் தற்போதைய தீர்ப்பை கண்டித்து இன்று அனைத்து கட்சிகள், இயக்கங்கள் வடக்கே செல்லும் இரயில் அனைத்தும் தடுத்து நிறுத்தும் போராட்டமாக  ரயில் மறியல் போராட்டம் சென்னை சென்ட்ரலில்  நடைப்பெற்றது.

 

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் SDPI கட்சியின் தோழர் தெகலான் பாகவி, தமிழ்ப்புலிகள் கட்சியின் தோழர் நாகை திருவள்ளுவன், தமிழக வாழ்வுரிமைக் கட்சி, திராவிடர் விடுதலைக் கழகத்தின் தோழர் தபசி குமரன், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் தோழர் குமரன், தமிழர் விடியல் கட்சியின் தோழர் டைசன், காஞ்சி மக்கள் மன்றத்தின் தோழர் தஞ்சை தமிழன், தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சி, மக்கள் அரசுக் கட்சி, தமிழக மக்கள் முன்னணி, தமிழர் விடுதலைக் கழகம் உள்ளிட்ட அமைப்புகள் பங்கேற்றன.மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர்கள் தோழர் திருமுருகன் காந்தி, பிரவீன் குமார் மற்றும் தோழர்கள் பங்கேற்றனர்.

 

தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடி இன மக்கள் (எஸ்.சி. மற்றும் எஸ்.டி. இனத்தவர்) மீதான வன்கொடுமை தடுப்பு சட்ட நடைமுறைகள் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் ஒரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆதர்ஷ் கோயல், யு.யு.லலித் ஆகியோர் கடந்த மாதம் 20-ந் தேதி தீர்ப்பு அளித்தனர்.

 

இந்த தீர்ப்பில், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடி இன மக்கள் மீதான வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் அரசு ஊழியர்களை உடனடியாக கைது செய்வதற்கு நீதிபதிகள் தடை விதித்தனர்.

 

இத்தகைய வழக்குகளில் அரசு ஊழியர்களை கைது செய்வதற்கு முன்பாக, துணை போலீஸ் சூப்பிரண்டு அந்தஸ்துக்கு குறைவு இல்லாத அதிகாரி கண்டிப்பாக முதல் கட்ட விசாரணை நடத்த வேண்டும்; அத்துடன் உரிய உயர் அதிகாரியின் ஒப்புதலை முன்கூட்டி பெற்றுத்தான் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.

மேலும், ஒருவர் மீதான, இந்த சட்டப்படியான வழக்கில் குற்றச்சாட்டுக்கு அடிப்படை ஆதாரம் இல்லை என்றாலோ, நீதிமன்றத்தின் பரிசீலனையில் புகாரில் கெட்ட நோக்கம் இருக்கிறது என்று தெரிய வந்தாலோ, குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு முன்ஜாமீன் வழங்க தடை இல்லை என்றும் தீர்ப்பில் கூறப்பட்டு உள்ளது.

 

ஏதும் அறியாத அப்பாவி மக்களை பாதுகாப்பதற்காகத்தான் இந்த உத்தரவுகள் பிறப்பிக்கப்படுவதாகவும் அதில் விளக்கப்பட்டு இருந்தது.

இந்த உத்தரவு நாடு முழுவதும் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை வலுவிழக்கச் செய்யும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பினைக் கண்டித்தும்,

வன்கொடுமை தடுப்புச் சட்டத்தினை வலுப்படுத்தி அரசியலமைப்பு சட்ட அட்டவணை 9 ல் சேர்த்திடக் கோரியும்,

பல்வேறு கட்சிகள், இயக்கங்கள் பங்கேற்கும் ரயில் மறியல் போர்.சென்னை, மதுரை, கோவையில் நடைப்பெற்றது. சென்னையில் சென்ட்ரல் இரயில் நிலையத்தில் (வால்டாக்ஸ் ரோடு) அருகே வடக்கே செல்லும் ரயிலை மறித்து, முழக்கம் மிட்டு போராட்டம் நடைப்பெற்றது இருநூற்றுக்கும் மேற்பட்ட தோழர்கள் கைது செய்யப்பட்டு ஒரு மண்டபத்தில் அடைக்கப்பட்டனர்.

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top