ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கோரி சந்திரபாபு நாயுடு உண்ணாவிரதம்

 

ஆந்திர மாநிலம் பிரிக்கப்பட்ட பின், சிறப்பு அந்தஸ்தும், சிறப்பு நிதித் தொகுப்பும் வழங்க மத்திய அரசு வாக்குறுதி அளித்து இருந்தது. ஆனால், கடந்த 4 ஆண்டுகளாக எந்தவிதமான அறிவிப்பும் இல்லாததைக் கண்டித்து, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசியஜனநாயகக் கூட்டணியில் இருந்து வெளியேறியது.

 

ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து கோரி பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-ம் கட்ட அமர்வில் தொடர்ந்து தெலுங்குதேசம் கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். சந்திரபாபு நாயுடு உட்பட, ஆந்திர அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக்கோரி அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு உண்ணாவிரதப் பேராட்டம் நடத்தி வருகிறார்

 

, தலைமைச் செயலக ஊழியர்கள் என அனைவரும் கருப்பு பேட்ஜ் அணிந்து வந்து மத்திய அரசுக்கு தங்களது எதிர்ப்பைத் தெரிவித்து வருகினற்னர்.

 

சந்திரபாபு நாயுடு தலைமையில் அனைத்து கட்சியினர் டெல்லிக்கு சென்று முக்கிய கட்சிகளின் தலைவர்களைச் சந்தித்து, ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க ஆதரவு அளிக்குமாறு கேட்டுக் கொண்டனர்.

 

இந்நிலையில், ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக் கோரி அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு, அமராவதியில் தனது கட்சியினருடன் ஒருநாள் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகிறார். இரவு மணி வரை நடைபெறும் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், தெலுங்குதேச கட்சியின் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

 

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top