ஸ்டெர்லைட்டுக்கு எதிரான மக்கள் போராட்டத்தில் புதுமண தம்பதி பங்கேற்பு

 

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி அ.குமரெட்டியாபுரம் கிராம மக்கள் கடந்த பிப்ரவரி மாதம் முதல் போராட்டம் நடத்தி வருகிறார்கள.அவர்கள் நடத்தும் இந்த  தொடர் போராட்டத்தில் தினமும் பக்கத்தில் உள்ள பல கிராமமக்கள் வந்து ஆதரவு வழங்கி வருகிறார்கள்,  பல்வேறு கட்சியினர் மற்றும் அமைப்பினர் ஆதரவு தெரிவித்து வருவதால் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்து வருகிறது .

 

பனி மாதா ஆலயத்தில் பொதுமக்கள் நேற்று ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி  போராட்டத்தை தொடங்கினர். அங்கு இன்று 2-வது நாளாக போராட்டம் நடந்தது. இதில் ஏராளமான ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டனர். மேலும் தூத்துக்குடியை சேர்ந்த புதுமண தம்பதி ஜோசப்-ஷைனி பங்கேற்றனர்.

அப்பகுதியில் உள்ள சின்னகோவில் ஆலயத்தில் திருமணம் செய்து கொண்ட அவர்கள், திருமணம் முடிந்ததும் மணக்கோலத்தில் பனிமய மாதா ஆலயத்திற்கு வந்து, அங்கு ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராட்டத்தில் கலந்து கொண்டனர்.வருங்கால சந்ததியினருக்கு நல்ல சுற்றுசூழல் அமைத்திட இது போன்ற போராட்டங்கள் அவசியம் என்றனர்
 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top