சீமானை கைது செய்ய முயற்சி; தமிம்அன்சாரி, பாரதிராஜா உள்ளிட்டவர் எதிர்ப்பு; அனைவரும் விடுக்கப்பட்டனர்

 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் மத்திய அரசு  தமிழர்களுக்கு துரோகம் செய்து வருகிறது என தமிழ் நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளும்

 

பல்வேறு அரசியல் இயக்கங்களும்  இன்று சென்னை வருகை தந்த பிரதமர் மோடிக்கு கருப்புகொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்தனர். சினிமா கலைஞர்களாக பாரதி ராஜா, அமீர், வெற்றி மாறன் ஆகியோரும் எதிர்ப்பு தெரிவித்து கைதாகினர்.

கைதான அனைவரும் பல்லாவரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் அடைக்கப்பட்டுள்ளனர். போராட்டங்களில் கைதாகும் அனைவரும் மாலை 6 மணிக்கு விடுவிக்கப்படுவார்கள். ஆனால், சீமானை தவிர மற்ற அனைவரும் விடுவிக்கப்பட்டனர். இதனால், சீமான் கைதாகலாம் என தகவல்கள் வெளியாகின.

ஏற்கனவே போலீஸ்காரர்களை தாக்கிய வழக்கில் சீமான் மீது கொலை முயற்சி வழக்கு இருப்பதால்  சீமானை விடுவிப்பதில் பிரச்சனை இருந்தது.அவரை கைது செய்ய போலீஸ் முயற்சி செய்தது அப்போது சீமானை  விடுவிக்காதவரை மண்டபத்தை விட்டு வெளியே செல்ல மாட்டோம்  என பாரதிராஜா உள்ளிட்ட அனைவரும் கூறினார்.அதன் பிறகே  .சீமான், பாரதிராஜா, அமீர், தமிமுன் அன்சாரி உள்ளிட்ட அனைவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

 

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top