ஸ்டாலின் ட்வீட்; மேலே பறக்கும் நீங்கள், கீழே மக்கள் உணர்வுகளை பாருங்கள்’’

மேலே பறக்கும் நீங்கள், கீழே எங்கள் உணர்வுகளின் அடையாளமாய் கருப்புக் கொடி அசைவதை பாருங்கள் என்று பிரதமர் மோடியை விமர்சித்து மு.க. ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் காலக்கெடு முடிந்த நிலையில் மத்திய அரசு எந்த முயற்சியும் எடுக்காததால் தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகிறது.

 

இந்த நிலையில் பலத்த எதிர்ப்புக்கிடையே, இந்திய ராணுவக் கண்காட்சி தொடக்க விழா, அடையாறு புற்றுநோய் மருத்துவமனை வைர விழா ஆகியவற்றில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று சென்னை வந்தடைந்தார்.

 

தமிழகத்தில் மோடி வருகையை எதிர்த்து பல்வேறு இடங்களில் கருப்புக் கொடி ஏற்றி போராட்டம் நடைபெற்று வருகிறது.

 

இதுகுறித்து திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் ட்விட்டர் பக்கத்தில்,

“விமானத்தில் மேலே மட்டும் பறக்கும் நீங்கள், கீழே எங்கள் உணர்வுகளின் அடையாளமாய் கருப்புக் கொடி அசைவதை பாருங்கள், உடனடியாக உச்ச நீதிமன்றத்தில் தொடுத்திருக்கும் வழக்கை திரும்ப பெறுங்கள். இல்லையேல், கருப்பு என்கிற நெருப்பு அணையாது” என்று பதிவிட்டுள்ளார்.

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top