காவிரியில் தமிழருக்கு துரோகம்; பிரதமர் மோடிக்கு தமிழகமெங்கும் கருப்பு கொடி காட்டப்பட்டது

 

காவிரியில் தமிழருக்கு துரோகமிழைக்கும் இந்திய பிரதமர் மோடியின் தமிழ்நாடு வருகையைக் கண்டித்து கருப்புக் கொடி போராட்டம்  இன்று வியாழன் காலை 8 மணிக்கு ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையம் தொடங்கி விமானநிலையம் என பல இடங்களில் நடந்தது,மற்றும் மோடி வருகையை கண்டித்து  வானம் எங்கும் கருப்பு பலூன் பறக்கவிட்டனர்.திரும்பிய திசையெங்கும் கருப்புகொடியும் வானெங்கும் கருப்பு பலூனும் கண்கொள்ளா காட்சியாக இருந்தது

 

தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு சார்பில் தோழர் வேல்முருகன், தமிழ் தேசிய மூத்த தலைவர் நெடுமாறன், மே பதினேழு இயக்கம் பிரவீன் ,தமிழர்விடியல் கட்சி டைசன், இளமாறன் எஸ்.டி.பி.ஐ கட்சி தெகலான்பாகவி ஆகியோரின் ஒருங்கிணைப்பில் இந்த போராட்டம் நடைப்பெற்றது.

விமானநிலையத்தில் தமிழர் கலை, இலக்கிய, பண்பாட்டுஅமைப்பின்  தலைவர் பாரதிராஜா தலைமையில் இயக்குனர் ராம் ,வெற்றிமாறன் ,அமீர் ,கௌதம் போன்ற பல இயக்குனர்களும் கலந்துகொண்ட மோடிக்கு கருப்பு கொடி காட்டும் போராட்டம் நடைப்பெற்றது.

 

சட்டசபை உறுப்பினர் தமிம் அன்சாரி மற்றும் தமிழ்த்தேசிய பேரியக்கத்தின் தலைவர் மணியரசன் ஆகியோர் தலைமையில் விமான நிலையத்தில் மோடிக்கு கருப்புக்கொடி காட்டும் போராட்டத்தை நடத்த முயற்சித்த போது காவல்துறை இந்த இடம் போரடட்டத்திற்கு அனுமதி மறுத்த இடம் ஆகையால் வேறு இடத்திற்கு போக சொன்னதும், தமிம் அன்சாரி விமான நிலையத்திற்குள் ஓடஆரம்பித்து விட்டார்.பிறகு காவல்துறை எல்லோரையும் கைது செய்து வேனில் ஏற்றியது.

.  

இந்த போராட்டத்தில் தமிழர் உரிமைக்காக குரல் கொடுக்கும் அனைத்து இயக்கங்களும், கட்சிகளும் பங்கேற்ன

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top