அமெரிக்காவுக்கு ஈரான் பதிலடி; ஒப்பந்தத்தை மீறினால் வருத்தப்பட நேரிடும்

 

 

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் “ஈரானுடன் செய்துகொண்ட அணுசக்தி ஒப்பந்தத்தை முரித்துக்கொள்வோம்” என்று கூறியதற்கு ஈரான் தக்க பதிலடி கொடுத்து இருக்கிறது

 

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஒபாமா ஆட்சியில் ஈரானுக்கும் அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், சீனா, பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கும் இடையே 2015 ஜூலையில் அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது. அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற பிறகு, “ஈரானுடனான அணு சக்தி ஒப்பந்தத்தை முறிப்பேன்” என்று கூறி வருகிறார். மேலும் ஈரான் மீது புதிய பொருளாதார தடைகளையும் விதித்துள்ளார்.

 

இதுகுறித்து ஈரான் அதிபர் ஹசன் ரவுகானி, தெஹ்ரானில் நேற்று நடைபெற்ற கருத்தரங்கில் பேசும்போது, ‘‘அணு சக்தி ஒப்பந்த விதிகளை ஈரான் மீறாது. அதேநேரம் அமெரிக்கா ஒப்பந்தத்தை மீறினால் அந்த நாடு வருத்தப்பட நேரிடும். ஒரு வாரத்துக்குள் அமெரிக்காவுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும். அமெரிக்கா வின் புதிய அதிபரிடம் நம்பகத்தன்மை இல்லை. ஆரம்பம் முதலே அவர் முன்னுக்குப் பின் முரணாகப் பேசி வருகிறார். எத்தகைய அச்சுறுத்தலுக்கும் ஈரான் அடிபணியாது’’ என்றார்.

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top