தலித் மக்களுக்கு பாஜக ஆளும் மாநிலங்களில் கொடுமை: மாயாவதி குற்றச்சாட்டு

 

“தலித் மக்களை பாஜக ஆட்சி செய்யும் மாநில அரசுகள் கொடுமைப்படுத்த தொடங்கிவிட்டன’’ என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி குற்றம் சாட்டியுள்ளார்

இதுபற்றி மாயாவதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வன்கொடுமை சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டிருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 2-ம் தேதி பல்வேறு தலித் அமைப்புகள் நாடு முழுவதும் பாரத் பந்த் நடத்தின. மக்களின் ஆதரவோடு பந்த் மிகப் பெரிய வெற்றி பெற்றது.

மத்தியில் ஆளும் பாஜக அரசு மீது மக்கள் கோபத்துடன் இருப்பதை இந்த பந்த் காட்டிவிட்டது. இதனால் பாஜக பீதியடைந்துள்ளது. அந்த பயத்தையும் கோபத்தையும் தலித் மக்கள் மீது பாஜக காட்டி வருகிறது. பாஜக ஆட்சி செய்யும் மாநில அரசுகள் தலித் மக்களைக் கொடுமைப்படுத்த தொடங்கிவிட்டன. ஏராளமான தலித் மக்களும் அவர்களின் குடும்பத்தாரும் பொய் வழக்குகளில் கைது செய்யப்படுகின்றனர். பாஜகவில் இருக்கும் தலித் எம்பிக்கள் இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் உள்ளனர். தலித்துகளை கொடுமைப்படுத்தியும், மதவாதத்தை தூண்டியும் வரும் பாஜகவுக்கு நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்.

இவ்வாறு மாயாவதி கூறியுள்ளார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top