காவரி விவகாரம்; மே 3 ந்தேதிக்குள் வரைவு செயல்திட்டத்தை தாக்கல் செய்யவேண்டும்; சுப்ரீம் கோர்ட்

ஒரு வரைவு செயல் திட்டத்தை காவிரி விவகாரத்தில் மத்திய அரசு மே 3 ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு உள்ளது.

 

தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் கன்வில்கர், சந்திரசூட் ஆகியோர் அமர்வில்  வழக்குகளின் துணைப்பட்டியலில் 42வது வழக்காக காவிரி வழக்கு இன்று இடம்பெற்றுருந்தது . தமிழக அரசு தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு உட்பட 4 வழக்குகளை விசாரித்த சுப்ரீம் கோர்ட் இன்று கீழ் கண்ட உத்தரவை  பிறப்பித்து உள்ளது.

 

“மாதந்தோறும் காவிரியில் இருந்து எவ்வளவு நீர் திறந்து விட வேண்டுமோ அதை செயல்படுத்த வேண்டும்” * காவிரி வழக்கில் கர்நாடக மாநிலத்திற்கு சுப்ரீம் கோர்ட்  உத்தரவிட்டு உள்ளது.

 

“மேலாண்மை வாரியம் என காவிரி நடுவர் மன்றம்  தெரிவித்திருந்தாலும் எங்கள் தீர்ப்பில் செயல்திட்டம் என குறிப்பிட்டுள்ளோம்”.

 

வரைவு செயல் திட்டத்தை உச்ச நீதிமன்றத்தில் மே 3 ந்தேதிக்குள் தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிட்டு உள்ளது.

 

ஸ்கீம் பற்றி தற்போது எதுவும் கூற முடியாது; வரைவு அறிக்கைக்குப் பின்பே முடிவு எடுக்கப்படும். ஸ்கீம் என்பது காவிரி மேலாண்மை வாரியம் என நாங்கள் தீர்ப்பில் குறிப்பிடவில்லை. என சுப்ரீம் கோர்ட் கூறி உள்ளது.  வழக்கு மே 3 ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top