துக்க வீட்டில் ஐபிஎல் கொண்டாட்டமா? பாரதிராஜா தலைமையில் புதிய அமைப்பு துவக்கம்

 

இன்று இயக்குனர் பாரதிராஜா தமிழர் கலை, இலக்கிய, பண்பாட்டு பேரவையை தொடங்கினார்.சென்னை செய்தியாளர்கள் மன்றத்தில் இயக்குனர் பாரதிராஜா பேட்டி அளித்தார் இயக்குனர் செல்வமணி, நடிகர் சத்யராஜ் ஆகியோர்களும்  கூட்டாக பேட்டியளித்தனர்.

 

காவிரி பிரச்சனையை கருத்தில் கொண்டு ஐபிஎல் போட்டியை தள்ளி வைக்க வேண்டும் என்று பாரதிராஜா கேட்டுக்கொண்டுள்ளார். துக்க வீட்டில்  கொண்டாட்டங்கள் தேவையா?என்றும் அவர் கேட்டுள்ளார்.

 

செய்தியாளர்களிடம் பேசிய பாரதிராஜா, பேரவையில் இருப்பவர்கள் அரசியல் சாராமல் இருக்க வேண்டும் என்று கூறினார்கள். ஆகையால், தமிழனாக குரல் கொடுக்க தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பேரவை தொடங்கப்பட்டுள்ளது. மேலும் தமிழ் நிலத்துக்கு பேராபத்து ஏற்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

அரசியல் சாயம் எதுவுமின்றி போராடவும், கலை இலக்கிய பண்பாட்டினை காக்கவே இது தொடங்கப்பட்டுள்ளது. ஐபிஎல் போட்டி நடைபெறும் சேப்பாக்கம் மைதானத்தை காலியாக்கினால் உலகத்தின் பார்வை தமிழகத்தின் பக்கம் திரும்பும் என்று ஆர் கே செல்வமணி கூறினார். எங்களுடைய போராட்டம் வேறுமாதிரியான இருக்கும். என்னமாதிரியான போராட்டம் என்பதை இப்போது சொல்ல மாட்டோம் என்று செல்வமணி கூறியுள்ளார்.

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top