“சென்னை ஐபிஎல் வீரர்களுக்கு ஏதேனும் நடந்தால் நாங்கள் பொறுப்பல்ல’’ – வேல்முருகன்

 

ஐபிஎல் போட்டியில் விளையாடும் வீரர்களுக்கு ஏதேனும் நடந்தால் நாங்கள் பொறுப்பல்ல என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

 

சென்னையில் ஐபிஎல் போட்டி நடைபெற்றால் தொண்டர்கள் ரசிகர்கள்போல் மைதானம் உள்ளே சென்று முற்றுகையிடுவர் என, சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் இன்று திங்கள்கிழமை செய்தியாளர்களை சந்தித்த வேல்முருகன்,கூறினார்.

 

“காவிரி விவகாரத்தில் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள ஒற்றுமையை சீர்குலைக்கவே சென்னையில் ஐபிஎல் போட்டி நடத்தப்படுகிறது. ஐபிஎல் போட்டி செவ்வாய் கிழமை சென்னையில் நடைபெறக்கூடாது. அதனை தமிழக அரசு தடை செய்ய வேண்டும்.

 

இல்லையென்றால், போட்டியை நிறுத்த ஸ்டேடியத்தை முற்றுகையிட திட்டமிட்டுள்ளோம். தொண்டர்கள் ரசிகர்கள்போல் மைதானம் உள்ளே சென்று முற்றுகையிடுவர். சென்னை அணி வீரர்கள் வெளியே செல்லும்போது அவர்களுக்கு ஏதேனும் நேர்ந்தால் அதற்கு நாங்கள் பொறுப்பல்ல.

 

இதனையும் மீறி ஐபிஎல் போட்டி நடைபெற்றால் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க நிர்வாகிகளின் ஊழல்களை வெளிப்படுத்துவோம்”

என வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top