தலித் என்பதால் திட்டிவெளியேற்றினார்; யோகி ஆதித்யநாத் மீது பாஜக எம்பி சோட்டேலால் பரபரப்பு புகார்

 

உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த பா.ஜ.க. எம்.பி. சோட்டேலால், தான் தலித் என்பதால் முதல்வர் யோகி ஆதித்யநாத் தன்னை திட்டி வெளியேற்றியதாக பிரதமர் மோடியிடம் புகார் அளித்துள்ளார்.

 

உத்தரபிரதேச மாநிலம் ராபர்ட்ஸ்கஞ்ச் தொகுதி பா.ஜ.க. எம்.பி. சோட்டோ லால். அவர் தான் தலித் சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் பா.ஜ.க. உறுப்பினர்கள் தன்னை மதிக்கவில்லை என புகார் அளித்துள்ளார்.

 

மேலும் தன் தொகுதியில் இருக்கும் கட்சி நிர்வாகிகளும், தனக்கு கீழ் வேலை செய்யும் அதிகாரிகளும் தன்னை மதிப்பதில்லை என்றும் அவர் புகார் அளித்துள்ளார்.

 

இதுதொடர்பாக உத்தரப்பிரதேச மாநில பா.ஜ.க. தலைவர் மகேந்திர நாத் பாண்டே, மாநில செயலாளர் சுனில் பன்சால் ஆகியோரிடம் புகார் அளித்துள்ளார். ஆனால் இதுதொடர்பாக அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

 

இதையடுத்து, உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்திடம் இதுகுறித்து புகார் அளிக்க சென்றுள்ளார். ஆனால் அவரை முதல்வர் யோகி ஆதித்யநாத் மோசமாக திட்டி வெளியே அனுப்பியதாக அவர் கூறியுள்ளார். இந்த சம்பவம் குறித்து சோட்டோலால் பிரதமர் மோடியிடம் புகார் அளித்துள்ளார். மேலும் தேசிய எஸ்.சி. மற்றும் எஸ்.டி. ஆணையத்திடமும் இதுகுறித்து புகார் கடிதம் அளித்துள்ளார்.

 

முதல்வர் யோகி ஆதித்யநாத் குறித்து எம்.பி. ஒருவர், பிரதமரிடம் புகார் அளித்துள்ள சம்பவம் கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top