காஷ்மீரில் பேரணி நடத்தச் சென்ற தலைவர்கள் கைது

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் அனந்த்நாக், குல்காம், சோபியான் ஆகிய மாவட்டங்களில் பாதுகாப்பு படையினர் நட்த்திய தக்குதலில் 17 அப்பாவி மக்கள்  உயிரிழந்தனர்.

இந்த தாக்குதலில் மரணம் அடைந்த பொதுமக்களில் 4 பேர் குடும்பத்தாரை சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக இன்று ‘சோபியான் செல்வோம்’ என்னும் மாபெரும் பேரணிக்கு காஷ்மீர் இயக்கத் தலைவர்கள் அழைப்பு விடுத்திருந்தனர்.

இதையடுத்து, அனந்த்நாக், குல்காம், சோபியான் உள்ளிட்ட மாவட்டங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. சில பகுதிகளில் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. சோபியான் நகரை இணைக்கும் முக்கிய சாலைகள் மூடப்பட்டு, போலீசார் சாலை தடுப்புகளை அமைத்து காவல் காத்து வருகின்றனர். அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில் ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலை முழுவதும் பாதுகாப்பு படையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், பேரணியில் பங்கேற்பதற்காக இன்று ஸ்ரீநகரில் உள்ள தங்களது வீடுகளில் இருந்து வெளியே வந்த ஹுரியத் மாநாட்டு கட்சி தலைவர் மிர்வாயிஸ் உமர் பாருக் மற்றும் சையத் அலி ஷா கிலானி ஆகியோரை போலீசார் கைது செய்து, தடுப்புக் காவலில் அடைத்து வைத்துள்ளனர்


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top