செவிலியர்கள் போராட்டம்; காலியாக உள்ள செவிலியர் உதவியாளர் பணியிடங்கள் நிரப்ப வேண்டும்

 

5,000-க் கும் மேற்பட்ட செவிலியர் உதவியாளர் பணியிடங்கள் தமிழக அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ளன ,அதை  நிரப்ப வலியுறுத்தி செவிலியர் உதவியாளர் படிப்பு முடித்த 300-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

 

தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள 5,000-க்கும் அதிகமான செவிலியர் உதவியாளர் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி தமிழ்நாடு செவிலியர் உதவியா ளர் குழு சார்பில் சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில், செவிலியர் உதவியாளர் படிப்பு முடித்த 300-க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் கலந்துகொண்டனர்.

 

தமிழகத்தில் 2012-ம் ஆண்டு நிலவரப்படி அரசு மருத்துவமனைகளில் 4,004 செவிலியர் உதவியாளர் பணியிடங்கள் காலியாக இருந்தன. அதன்பின்னர் புதிதாக 8 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் தொடங்கப்பட்டுள்ளன. அரசு மருத்துவமனைகளில் செவிலியர் உதவியாளர்கள் போதிய அளவில் இல்லாததால், துப்புரவு ஊழியர்கள் சிகிச்சை அளிக்கும் நிகழ்வுகளும் நடக்கின்றன. செவிலியர் உதவியாளர் படிப்பை முடித்துவிட்டு பலர் வேலையில்லாமல் உள்ளனர். அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள செவிலியர் உதவியாளர் பணியிடங்களை முறையாக படித்தவர்களைக் கொண்டு நிரப்ப வேண்டும் என்று தமிழ்நாடு செவிலியர் உதவியாளர் போராட்ட குழு தெரிவித்தது

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top