‘இண்டெர்ஸ்டிடியம்’ மனித உடலில் புதிய உறுப்பு கண்டுபிடிப்பு

மனித உடலில் புதிய உறுப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்காவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

 

அமெரிக்காவின் நியூயார்க் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் புதிய உடல் உறுப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். ‘இண்டெர்ஸ்டிடியம்’ (Interstitium) என்ற இந்த பாகம் தோலுக்கடியில் படர்ந்து காணப்படுகிறது. இது உடல் திசுக்களை பாதுகாக்க பயன்படுகிறது.

 

இந்த உறுப்பானது உடலின் அனைத்து பாகங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. நுரையீரல், ரத்தக்குழாய்கள் மற்றும் தசைகளுடன் இணைக்கப்பட்டுள்ளன. இது உடலில் உள்ள பெரிய உறுப்புகளில் ஒன்றாக கருதப்படுகிறது. இது கொலாஜன் மற்றும் எலாஸ்டினிலால் உருவானது. அதாவது மிகவும் உறுதியாகவும், வளையும் தன்மையுடனும் உள்ளது. இது உடல் முழுவதும் உள்ள திசு புரதங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து 12 புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளிடன் சோதனை செய்யப்பட்டது. அனைவரின் உடலிலும் இந்த உறுப்பு உள்ளது. புற்று நோய் உடல் முழுவதும் எவ்வாறு பரவுகிறது என்பதை அறிய இந்த உறுப்பு உதவும். மேலும், புற்று நோயை கண்டுபிடிக்கவும், குணப்படுத்தவும் இது உதவியாக இருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top