‘நமோ ஆப்’ பயன்படுத்துவோர் ஜாக்கிரதையாக இருப்பது அவசியம்; அமெரிக்க நிறுவனம் விளக்கம்

பிரதமர் நரேந்திர மோடி பதவி ஏற்றதும் பாஜக ஒரு செயலியை அறிமுகப்படுத்தியது.அது மோடியின் பெயரில் ‘நமோ ஆப்’ என்று அழைக்கப்பட்டது.அந்த ஆப் தான் இப்போது இந்தியர்களை கண்காணிக்கும் செயலி என்ற சர்சையில் சிக்கியுள்ளது . இந்நிலையில் இச்செயலி தகவல்கள் குறித்த சர்ச்சைகளை அமெரிக்க நிறுவனம் விளக்கியுள்ளது

 

பிரதமர் நரேந்திர மோடி பெயரில், 2015-ம் ஆண்டு ஜூன் மாதம் ஒரு செயலி (நமோ ஆப்) தொடங்கப்பட்டது. இந்த செயலியை 50 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயன்படுத்தி வருகின்றனர்.

 

இந்த செயலியில் இருந்து பொதுமக்களின் தகவல்களை அமெரிக்க நிறுவனமான ‘கிளவர் டேப்’, சம்மந்தப்பட்டவர்களின் அனுமதியின்றி பெற்று, மூன்றாம் தரப்பினருக்கு மாற்றப்படுவதாக பிரான்ஸ் சைபர் பாதுகாப்பு வல்லுனர் எலியட் ஆல்டர்சன் தகவல் வெளியிட்டார்.

 

‘பேஸ்புக்’ சர்ச்சை முடிவதற்குள், இந்த தகவல் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

 

இந்த ‘கிளவர் டேப்’ நிறுவனம், 3 இந்தியர்களால்  [பாஜக ஆதரவாளர்கள்] அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் தொடங்கி நடத்தப்படுவது ஆகும்.

 

பிரான்ஸ் சைபர் பாதுகாப்பு வல்லுனர் எலியட் ஆல்டர்சன் இந்த தகவலை வெளியிட்டவுடன்,இந்தியர்களால் நடத்தப்படும் குறிப்பாக பாஜக ஆதரவு பிரமுகர்களால் நடத்தப்படும் ‘கிளவர் டேப்’ நிறுவனத்தின் இயக்குனரான  ஆனந்த் ஜெயின் தனது வலைப்பக்கத்தில் வருத்தம் தெரிவித்திருக்கிறார்

 

அதில் அவர், “தனிநபர் அந்தரங்கம், பாதுகாப்பு, ஆகியவைப்பற்றிய கிளவர் டேப் போன்ற சேவை நிறுவனங்களின் பங்களிப்பு பற்றி விவாதங்கள் எழுந்து உள்ளன. வெளியீட்டாளர்களின் தகவல்களைப் பொறுத்தவரையில், அவற்றை கிளவர் டேப் நிறுவனம் விற்பதோ, பகிர்ந்துகொள்வதோ, மறு சந்தையிடுவதோ அல்லது வேடிக்கையாகவோ எதுவும் செய்வதில்லை” என்று குறிப்பிடப்பட்டு உள்ளார்.

 

எலியட் ஆல்டர்சன் சொன்னது உண்மையாக இருக்குமோ என்று நினைக்கத்தோன்றுகிறது ‘பேஸ்புக்’ சர்ச்சை எழுந்தபோது யாருடைய அந்தரங்க விசயங்களும் பகிரப்படவில்லை என்று சொன்ன ‘பேஸ்புக்’நிறுவனர்.பிறகு பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார்.ஆகையால் ‘நமோ ஆப்’பயன்படுத்துபவர்கள் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருப்பது அவசியம்.

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top