தஞ்சாவூரில் ஓ.என்.ஜி.சி முற்றுகைப் போராட்டம்; தமிழகத்தை பாலைவனமாக்கும் மத்திய அரசு

 

காவிரி டெல்டாவினை பாலைவனமாக்கும் வகையில் எண்ணெய், எரிவாயு எடுப்பதற்கான ஒப்பந்தங்களை மேற்கொண்டு வரும் ஓ.என்.ஜி.சியினை தமிழ்நாட்டை நாட்டு விரட்டுவோம் என்ற முழக்கத்துடன் ஓ.என்.ஜி.சி முற்றுகைப் போராட்டம் தஞ்சாவூரில் பல்வேறு கட்சிகள் மற்றும் இயக்கங்களினால் இணைந்து நடத்தப்பட்டது.

 

தோழர் கோ.திருநாவுக்கரசு அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் விடுதலை சிறுத்தைக் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் ,மனித நேய மக்கள் கட்சி  ஜவகருல்லா, காஞ்சிமக்கள் மன்றத்தின் தோழர் மகேஷ்,தெகலான்பாகவி,எஸ்.டி.பிஐ கட்சி,  மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்  தோழர் பிரவீன்குமார் மற்றும் பல இயக்கங்களைச் சேர்ந்த தோழர்கள் கலந்து கொண்டனர்.

முற்றுகையில் கலந்து கொண்ட தோழர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

.


முற்றுகைப்போராட்டத்தில் கலந்துகொண்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்.
அப்போது, தமிழகத்தின் இயற்கை வளங்களை பாதிக்கும் திட்டங்களாக ஷெல் எரிவாயு, ஹைட்ரோ கார்பன், மீத்தேன் கிணறுகள் என அடுத்தடுத்து திட்டங்களை மத்திய அரசு தமிழகத்தில் செயல்படுத்த அனுமதி அளித்து வருகிறது. இந்த திட்டங்கள் அனைத்தும் முதலில் கேரளாவில் செயல்படுத்துவதாக இருந்தது. ஆனால், கேரள மக்களின் தொடர் போராட்டம் காரணமாக அனைத்து திட்டங்களையும் தமிழகத்தில் செயல்படுத்தி வருகின்றனர். இதேபோல், நியூட்ரினோ திட்டமும் வட மாநிலங்களில் செயல்படுத்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், அம்மாநில அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்களின் போராட்டத்தினால் அந்தத் திட்டமும் தமிழகத்தில் செயல்படுத்தப்படுகிறது. இப்படி தொடர்ந்து தமிழக அரசும், மத்திய அரசும் தமிழகத்தை பாலைவனமாக்கும் திட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்தி வருவதற்கு விடுதலைச் சிறுத்தைகள் கடும் எதிர்ப்புத் தெரிவிக்கிறது. ஒருபோதும் இந்த திட்டங்களைச் செயல்படுத்த விடமாட்டோம் என்றும் மக்களைத் திரட்டி போராடுவோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 


தமிழ் மண்ணை நாசமாக்க மீத்தேன்/ஹைட்ரோகார்பன், எரிவாயு, பெட்ரோலிய மண்டலம் என்ற பெயரில் நிகழ்த்தப்படும் சதிகளுக்கு எதிராக ஒன்றிணைவோம். ஓ.என்.ஜி.சி யினை விரட்டுவோம் என்று மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் பிரவீன் பேசினார்.

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top