முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட்: இந்திய பெண்கள் அணி மீண்டும் தோல்வி

முத்தரப்பு டி 20 தொடரில் ஆஸ்திரேலிய அணி. இந்திய மகளிர் அணியை 36 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தத் தோல்வியால் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது.

 

மும்பையில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட்கள் இழப்புக்கு 186 ரன்கள் எடுத்தது.

 

பெண்கள் முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடர் மும்பை பிராபோர்ன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த 4-வது லீக் ஆட்டத்தில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 186 ரன்கள் குவித்தது.

 

பெத் மூனி (71 ரன்கள்), எலிசே விலானி (61 ரன்கள்) ஆகியோர் அரைசதம் அடித்தனர். பின்னர் 187 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் ஆடிய இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 150 ரன்களே எடுத்தது.

 

இதனால் ஆஸ்திரேலிய அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ஜெமிமா ரோட்ரிக்ஸ் 50 ரன்னும், கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 33 ரன்னும், அனுஜா பட்டீல் ஆட்டம் இழக்காமல் 38 ரன்னும் எடுத்தனர். இந்த போட்டி தொடரில் இந்திய அணி தொடர்ச்சியாக சந்தித்த 3-வது (ஹாட்ரிக்) தோல்வி இதுவாகும். இந்த தோல்வியின் மூலம் இந்திய அணி இறுதிப்போட்டி வாய்ப்பை இழந்தது.

 

 

 

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top