நடிகையுடன் அமெரிக்க ஜனாதிபதி தொடர்பு; சி.பி.எஸ் செய்தி; வெள்ளை மாளிகை மறுப்பு

 

அமெரிக்க அதிபர் டிரம்ப் ஒரு அசாத்தியமான ஆளு! எதைப் பற்றியும் கவலைக்கொள்ளாது  தன்னை சுற்றி அடிக்கடி பல்வேறு சர்ச்சை கருத்துகள் எழும்.போதும் சந்தோசப்படும் நபர்  டிரம்ப்.

 

ஸ்டார்மி டேனியல்ஸ்   பட நடிகை  ஒருவர் சி.பி.எஸ் செய்தி நிறுவனத்திற்கு  60 நிமிட நேர்காணல் ஒன்றில் பேசும்போது, கடந்த 2006ம் ஆண்டு டிரம்ப்புடன் உடல் ரீதியான  உறவு இருந்ததாக கூறினார்.

 

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தன்னுடன் காதலில் இருந்ததாகவும் இருவரும் பலமுறை உறவு வைத்துள்ளதாகவும் பிரபல நடிகை ஸ்டார்மி டேனியல்ஸ் கூறியிருந்தார்.

 

ஜனாதிபதி மீதான இந்த குற்றச்சாட்டிற்கு வெள்ளை மாளிகை மறுப்பு தெரிவித்திருந்தாலும், இது குறித்து பேசுவதை ஸ்டார்மி நிறுத்தவில்லை.

 

இந்த நிலையில்  டிரம்புடன் உள்ள உறவு குறித்து வெளியில் ஏதும் கூறக்கூடாது அமைதியாக இருக்க வேண்டும் என ஒரு  மனிதன்  லாஸ் வேகாசில் வைத்து தன்னை மிரட்டியதாக  டேனியல்  கூறி உள்ளார். அவர் தன் இளம் மகளோடு இருந்தபோது இந்த  சம்பவம் நடந்து உள்ளது.

 

இது குறித்து டேனியல் கூறியதாவது:-

 

“நான் உண்மையை சொல்கிறேன் என  அவர் அறிந்திருக்கிறார்,”  அவரது  சட்டபூர்வ பெயர் ஸ்டீபனி கிளிஃபோர்ட் ஆகும். இது ‘நானும் கூட’ (Me too)   என அர்த்தம் அல்ல நான் பாதிக்கபட்டவர் அல்ல.

 

டிரம்ப்பைத் தொடர்புபடுத்தியதாக கூறப்படும் 2006 விவகாரத்தில் நடிகை மேலும்  புதிய சான்றுகளை வழங்கினார்,ஆனால் 2011 ல் இருந்து  தான் அமைதியாக  இருக்க  அவர் அச்சுறுத்தல் தந்திரங்களை எதிர்கொண்டார்.

 

டிரம்ப் என்னிடம் கூறும் போது  நீங்கள் அழகாக இருக்கிறீர்கள் நீ என் மகளை நினைவூட்டுகிறாய்.  உனக்கு தெரியும்  நீ புத்திசாலி அழகாக இருக்கிறாய்., நான் உன்னை விரும்புகிறேன்.'”என்றார்.

 

டிரம்ப்பை தனியாக விட்டுவிடு. அந்த கதையை  மறந்து விடு  என அந்த மர்ம மனிதன் கூறினான். எனது மகளை பார்த்து  அழகான சிறிய பெண் அவள் அம்மாவுக்கு ஏதாவது நடந்தால் அவளுக்கு அது அவமானமாக இருக்கும் என அந்த மர்ம மனிதன் மிரட்டினான் என கூறி உள்ளார்.

 

நடிகைக்கும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்புக்கும் தொடர்பு உள்ளது என்று எழுந்துள்ள குற்றச்சாட்டுகளை வெள்ளை மாளிகை தரப்பு திட்டவட்டமாக மறுத்துள்ளது. 2006 ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் தனக்கும் டிரம்புக்கும் தொடர்பு இருந்ததாக சி.பி.எஸ் செய்தி தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில் ஸ்டோர்மி கூறி இருந்தார். மேலும் இந்த தகவலை வெளியே கூறாமல் இருக்க டிரம்பின் வழக்கறிஞர் 20 மில்லியன் அமெரிக்க டாலர்கள் தேர்தலுக்கு முன்பு கொடுத்ததாகவும் கூறி இருந்தார்.

 

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top