காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழக விவசாயிகள் டெல்லியில் உண்ணாவிரதம்

 

காவிரி  மேலாண்மை  வாரியம் அமைக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கிய பின்பும் காவேரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் கர்நாடக மாநில தேர்தலை மனதில் கொண்டு கர்நாடகாவிற்கு சாதகமாக மத்திய அரசு –பாஜக அரசு நடந்துகொள்கிறது. மத்திய அரசு 6 வார காலத்துக்குள் அமல்படுத்தவேண்டும் என்று உத்தரவிட்டு இருந்தும் இன்னும் மேலாண்மை  வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை .

 

இந்த காலக்கெடுவின் கடைசி நாள் வருகிற 29-ந் தேதி ஆகும். எனவே, அதற்குள் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தமிழகத்தின் அனைத்து கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன காவிரி நடுவர் மன்றம் பரிந்துரைத்த அமைப்பாக காவிரி மேலாண்மை வாரியத்தை அனைத்து அரசியல் கட்சியினரும், விவசாயிகள் சங்கத்தினரும் சுட்டிக்காட்டி போராடி வருகின்றனர்.

 

இந்த நிலையில், 29-ந் தேதிக்குள், முழு அதிகாரம் கொண்ட காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்கவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் மற்றும் தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் டெல்லியில் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடத்தப்பட்டது.

 

ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமை தாங்கினார். பல்வேறு சங்கங்களின் நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர். கோரிக்கையை வலியுறுத்தி அவர்கள் பல்வேறு கோஷங்களையும் எழுப்பினார்கள்.

 

 

இந்த போராட்டம், டெல்லி நாடாளுமன்ற தெரு போலீஸ் நிலைய ரோட்டில் நடைபெற்றது. இங்கு தினமும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்த விவசாயிகள் அனுமதி கேட்டனர். ஆனால் போலீஸ் தரப்பில் தொடர் போராட்டத்துக்கு அனுமதி அளிக்காமல் ஒருநாள் போராட்டத்துக்கு மட்டுமே அனுமதி அளித்ததாக கூறப்படுகிறது.

 

அதை ஏற்று போராட்டம் நடத்திய விவசாயிகள், தங்களது போராட்டம் போலீஸ் அனுமதியுடன் தொடர்ச்சியாக நடைபெறும் என்று தெரிவித்தனர்.

 

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top