காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தடையில்லை தேர்தல் ஆணையம் அறிவிப்பு பாஜக வுக்கு நெருக்கடி

 

 

 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழக அரசியல் கட்சிகள்,அரசியல் இயக்கங்கள் எல்லோரும் ஒருமித்த குரலில் மத்திய அரசை நோக்கி குரல் எழுப்புகையில் அதிமுக எம்.பி.க்கள் தொடர்ந்து பாராளுமன்றத்தில் காவேரிக்காக குரல் கொடுகிறோம் என்ற பெயரில் மத்திய அரசின் மீது தெலுங்கு தேசம் மற்றும் எதிர்கட்சிகள் கொண்டுவருகிற நம்பிக்கை இல்லா தீர்மானத்தை தடுக்கும் நோக்கில் அமளி செய்து  வருகின்றனர்.

 

குறிப்பாக அ.தி.மு.க. எம்.பி.க்கள் தொடர்ந்து அவையை முடக்கிறோம் என்ற பெயரில்  மத்திய அரசுக்கு எதிராக வரும் அழுத்தத்தை அதிமுக அரசு  [எம்.பிக்கள்]  தாங்கி மத்திய அரசை காப்பற்றி வருகிறது

 

காவிரி மேலாண்மை வாரியம் கண்டிப்பாக அமைக்கப்படும் என தமிழக பா.ஜ.க.வும் கூறி வருகிறது. ஆனால், கர்நாடக அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

 

உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான செயல்திட்டத்தை (காவிரி மேலாண்மை வாரியம்) உருவாக்குவதற்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தல் தேதியை தலைமை தேர்தல் ஆணையம் இன்று காலை 11 மணிக்கு அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

 

கர்நாடக மாநிலத்தில் தற்போது ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ்  கட்சி ஆட்சியை தக்க வைக்க தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது. 14 சதவீத வாக்கு வங்கி கொண்ட லிங்காயத் சமுதாயனரை தனி மதமாக அங்கீகரிக்க அமைச்சரவையில் முடிவு செய்து மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்துள்ளது. இதனை மத்திய அரசிடம் மீண்டும் வலியுறுத்த உள்ளது.

 

மாநில அரசின் இந்த நடிவடிக்கையானது, ஆட்சியைப் பிடிக்க முயற்சிக்கும் பா.ஜ.க.வுக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. ஏனென்றால், லிங்காயத் சமுதாயத்தினரில் பெரும்பாலான மக்கள் பா.ஜ.க.வை ஆதரிப்பவர்கள்.அல்ல, இதனால் உஷாரான பா.ஜ.க., கர்நாடக மாநில கட்சியை வலுப்படுத்தும் வேலையைத் தொடங்கி விட்டது. லிங்காயத் வாக்குகளை தக்க வைப்பதற்காக அமித் ஷா மூன்று நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.ஆனால் லிங்காயத் சமூகத்தினர் பாஜக விற்கு எதிரான மனநிலையே கொண்டிருக்கின்றனர்

 

இந்த சூழ்நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டால் அது பா.ஜ.க.வின் முயற்சிக்கு முட்டுக்கட்டையாக இருக்கும். எனவே, இந்த விஷயத்தில் பா.ஜ.க., இரு மாநிலங்களிலும் உள்ள கட்சி நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தி ஒரு முடிவுக்கு வரும் என தெரிகிறது.

 

அதேசமயம் கர்நாடகா சட்டமன்ற தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தால், தேர்தல் நடத்தை விதிகளை காரணம் காட்டி காவிரி மேலாண்மை வாரியம் அல்லது மாற்று அமைப்பை உருவாக்குவதில் சிக்கல் ஏற்படலாம் என கூறபட்டது.

 

இந்த நிலையில்தலைமை தேர்தல் ஆணையர்  ஓம்பிரகாஷ் ராவத்  இன்று டெல்லியில் கர்நாடக சட்டசபை தேர்தல் தேதியை அறிவித்தார். அப்போது அவர் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தடையில்லை எனவும் நீதிமன்ற உத்தரவை பின்பற்றலாம் எனவும் தேர்தல் ஆணையர் கூறினார்.

 

காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பான நடவடிக்கை, தேர்தல் நடத்தை விதிமுறையில் வராது. காவிரி தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பில் குறுக்கிட மாட்டோம் என கூறினார்.

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top