நமோ ஆப் மூலம் இந்தியர்களை உளவு பார்க்கும் பிக் பாஸ் மோடி; ராகுல் காந்தி

 

தொடர்ந்து ராகுல் காந்தி மோடியை கிண்டல் அடிப்பதில் வல்லவராக வருகிறார்

நமோ ஆப் மூலமாக இந்தியர்களை உளவு பார்க்கும் பிக் பாஸ் ஆக பிரதமர் நரேந்திர மோடி செயல்பட்டு வருவதாக ராகுல் காந்தி மீண்டும் குற்றம்சாட்டியுள்ளார்.

 

நரேந்திர மோடியின் நமோ ஆப் மூலம் பயனாளிகளின் தகவல்கள் திருடப்படுவதாக கூறப்பட்டது. இதற்கு ராகுல் காந்தி நரேந்திர மோடியை கடுமையாக தாக்கி பேசினார். ராகுலின் கருத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த பா.ஜ.க.வைச் சேர்ந்த அமித் மால்வியா இது எதிர்க்கட்சிகாரர்களின் சதிச்செயல் எனக்குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், அதற்கு பதில் அளித்த ராகுல் காந்தி இன்றும் டுவிட்டரில் தனது கருத்தை பதிவிட்டுள்ளார்.

மோடியின் நமோ ஆப் மூலம் பயனாளிகளின் ஆடியோ, வீடியோ, நண்பர்கள் மற்றும் உறவினர்களின் போன் நம்பர் மற்றும் நாம் இருக்கும் இடத்தையும் ரகசியமாக பதிவு செய்ய முடியும். அவர் இந்தியர்களை உளவு பார்க்கும் பிக் பாஸ் ஆக செயல்பட்டு வருகிறார்.

இது போதாது என்று என்.சி.சி. படையைச் சேர்ந்த சுமார் 13 லட்சம் மாணவ-மாணவிகளை நமோ ஆப் பதிவிறக்கம் செய்யுமாறு கட்டாயப்படுத்துகின்றனர்.

 

மேலும், மோடி தனது பிரதமர் பதவியை தவறாக பயன்படுத்துகிறார். அவர் இந்தியர்களின் தகவல்களை தொகுத்து வைக்க எண்ணினால் நமோ ஆப்பை பயன்படுத்தக்கூடாது. அவர் இந்திய அரசின் பிரதமர் அலுவலக செயலியை பயன்படுத்தலாம்’ என ராகுல் தெரிவித்துள்ளார்.

 

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top