உலகக்கோப்பை தகுதிச் சுற்று;வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் வென்றது

இங்கிலாந்தில் அடுத்த வருடம் நடைபெறும் 50 ஓவர் உலகக்கோப்பை தொடருக்கான தகுதிச் சுற்றுத் தொடர் ஜிம்பாப்வேயில் நடைபெற்றது. லீக் மற்றும் சூப்பர் சிக்ஸ் சுற்றுகள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் உலகக்கோப்பை தொடருக்கு தகுதிப் பெற்றன.
 
முதல் இரண்டு இடங்களும் பிடித்த இந்த அணிகள் இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் சாம்பியன் பட்டத்திற்காக பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங் தேர்வு செய்தது.
 
அதிரடி மன்னர்கள் கிறிஸ் கெய்ல், லெவிஸ் முறையே 10, 27 ரன்னிலும், ஷாய் ஹோப் 23 ரன்னிலும், அனுபவ மிடில் ஆர்டர் வீரர் சாமுவேல்ஸ் 17 ரன்னிலும் வெளியே, ஆர். பொவேல் தாக்குப்பிடித்து 44 ரன்கள் அடிக்க வெஸ்ட் இண்டீஸ் 46.5 ஓவரில் 204 ரன்னில் சுருண்டது. ஆப்கானிஸ்தான் சார்பில் முஜீத் உர் ரஹ்மான் 4 விக்கெட் வீழ்த்தினார்.
 
பின்னர் 205 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆப்கானிஸ்தான் களம் இறங்கியது. மொகமது ஷேசாத், குல்பாதின் நைப் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.
குல்பாதின் நைப் 14 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து மொகமது ஷேசாத் உடன் ரஹ்மத் ஷா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ரஹ்மத் ஷா 78 பந்தில் 51 ரன்னும், மொகமது ஷேசாத் 93 பந்தில் 11 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் 84 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.
 
அடுத்து வந்த மொகமது நபி 12 பந்தில் 27 ரன்கள் அடிக்க, 40.4 பந்தில் 3 விக்கெட் இழப்பிற்கு 206 ரன்கள் எடுத்து ஆப்கானிஸ்தான் 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top