டெல்லி மாணவிகள், நிருபர்கள் மீது தாக்குதல் – போலீஸ் தலைமையகம் முன் பத்திரிகையாளர்கள் போராட்டம்

 

 

போராட்டம் தொடர்பாக செய்தி சேகரிக்க சென்ற பெண் நிருபர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து டெல்லி போலீஸ் தலைமையகம் முன் பத்திரிகையாளர்கள் இன்று போராட்டம் நடத்தினர்.

 

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக பேராசிரியரால் மாணவிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக நீதிகேட்டு லக்‌ஷ்மிபாய் நகர் அருகேயுள்ள சஞ்சய் ஜீல் பகுதியில் மகளிர் அமைப்பினர் மற்றும் மாணவிகள் சமீபத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

அப்போது, போராட்டக்காரர்களை தடியடி மற்றும் தண்ணீரை பீய்ச்சி அடித்து போலீசார் விரட்டி அடித்தனர்.

இந்த காட்சிகள் தொடர்பான செய்தி சேகரிக்க சென்ற பெண் நிருபர்கள்மீது போலீசார் தாக்குதல் நடத்தியதாகவும், பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும் பாதிக்கப்பட்ட இரு நபர்கள் போலீசில் புகார் அளித்தனர். இந்த புகாரின்மீது நடவடிக்கை எடுக்க தவறிய டெல்லி காவல்துறையை கண்டிக்கும் வகையில் டெல்லி போலீஸ் தலைமையகம் முன் இன்று ஏராளமான பத்திரிகையாளர்கள் திரண்டு போராட்டம் நடத்தினர்.

 

பாஜக ஆட்சியில் தொடர்ந்து பெண்கள் பாதிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.அதிகார மிதப்பில் ஆட்சியாளர்களும் சரி அதிகாரிகளும் சரி.கேட்பதற்கு ஆளில்லை என நினைக்கிறார்கள். நீதிமன்றத்தையும் தங்கள் கட்டுபாட்டுக்குள் கொண்டுவந்து விட்டார்கள்.இது சமூகத்தின் மிகப்பெரும் வீழ்ச்சி எனஅரசியல், சமூக ஆர்வலர்கள் கூறுகிறார்கள்.

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top