உ.பி மாநிலங்களவை தேர்தல்;பாஜக தில்லுமுல்லு 9 இடங்களில் வெற்றி

 

உத்தரப் பிரதேசத்தில் 10 இடங்களுக்கு நடந்த மாநிலங்களவை தேர்தலில்  9 இடங்களை பாஜக பிடித்துள்ளது. ஓரிடத்தில் சமாஜ்வாதி  வெற்றி பெற்றுள்ளது. பல கட்சி எம்எல்ஏக்களும் கட்சி மாறி வாக்களித்ததால் பாஜக வெற்றி பெற்றுள்ளது.

 

உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் மாநிலங்களவை தேர்தல் நேற்று நடைபெற்றது.. மொத்தம் 59 எம்.பிகளின் பதவிக்காலம் முடிந்ததைத் தொடர்ந்து அந்த இடங்களுக்குத் தேர்தல் நடைபெற்றது. இதில் 33 பேர் போட்டியின்றி எம்.பிகளாக தேர்வு செய்யப்பட்டு விட்டனர். 26 இடங்களுக்குப் போட்டி நிலவுவதால் தேர்தல் நடைபெற்றது.

 

உத்தரபிரதேசத்தில் 10 இடங்களுக்கு மத்திய மந்திரி அருண் ஜெட்லி உள்பட 11 பேர் போட்டியிட்டனர் . இதில் பா.ஜனதா வேட்பாளர்கள் 8 இடத்தில் வெற்றி பெறுவது உறுதியான நிலையில் அந்த மாநிலத்தில் சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கட்சிகள் புதிய கூட்டணி அமைத்து போட்டி போட்டது. இதனால் அதிருப்தியில் உள்ள இரு கட்சி எம்.எல்.ஏ.க்கள் மூலம் தில்லுமுல்லு செய்து மேலும் ஒரு இடத்தை பாஜக பெற்றுவிட்டது

 

சமாஜ்வாதி கட்சிக்கு ஒரு எம்பியைத் தேர்வு செய்ய முடியும். மீதமுள்ள ஒரு இடத்திற்கு பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளரை நிறுத்தியுள்ளது.

 

அவருக்கு சமாஜ்வாதி கட்சியின் மீதமுள்ள எம்எல்ஏக்கள், காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஆதரவு வழங்கினர். ஆனால் அதனை தட்டிப் பறிக்கும் நடவடிக்கையில் பாஜக ஈடுபட்டது. எட்டு பேரை தவிர மேலும் ஒருவர் பாஜக ஆதரவுடன் களம் இறக்கப்பட்டார். முன்னாள் முதல்வர் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி எம்எல்ஏ அனில் குமார் சிங், பாஜக வேட்பாளருக்கு வாக்களித்துள்ளார். தனது வாக்கைப் பதிவு செய்து விட்டு வெளியே வந்த அனில் குமார், ‘யோகி ஆதித்யநாத்துக்கு’ என் ஆதரவு எனக் கூறினார்.

 

காங்கிரஸ், சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் எம்எல்ஏக்களின் வாக்குகளும் மாயாவதி வேட்பாளருக்கு முழுமையாகக் கிடைக்கவில்லை. அதுபோலவே சுயேச்சை எம்எல்ஏக்கள் இருவரும் பாஜகவிற்கு வாக்களித்தனர். தேர்தல் முடிந்து நேற்று மாலை வாக்குகள் எண்ணப்பட்டன. இழுபறி நீடித்ததாதல் இரவு வரை வாக்கு எண்ணிக்கை நீடித்தது. அம்மாநிலத்தில் மொத்தமுள்ள 10 இடங்களில் 9 இடங்களை பாஜக வெற்றி பெற்றது. ஓரிடத்தில் சமாஜ்வாதி வெற்றி பெற்றது. பகுஜன் சமாஜ் வேட்பாளர் தோல்வியடைந்தார்.

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top