நாளை நடைபெறவுள்ள மாநிலங்களவை தேர்தலில்- 33 பேர் போட்டியின்றி தேர்வு

 

நாளை (23-ம் தேதி) நடைபெற உள்ள ராஜ்யசபா தேர்தலில் 58 எம்.பி.க்களில் 33 வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வாகியுள்ளனர்.

 

பாராளுமன்றத்தில் காலியாக உள்ள மாநிலங்கவை  எம்.பி.க்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நாளை நடைபெற உள்ளது. இதில் உத்தரப்பிரதேசம் – 10, மராட்டியம், பீகார் – 6, மேற்கு வங்காளம், மத்தியப்பிரதேசம் – 5, குஜராத், கர்நாடகம் – 4, ஆந்திரப்பிரதேசம், தெலுங்கானா, ராஜஸ்தான், ஒடிசா – 3, ஜார்கண்ட் – 2, சத்தீஸ்கர், அரியானா, இமாச்சலப்பிரதேசம், உத்தரகாண்ட் – 1 என மொத்தம் 59 எம்.பி.க்கள் தேர்வு செய்யப்பட்ட உள்ளனர்.

 

இதில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் 10 வேட்பாளர்கள் போட்டியிட உள்ள நிலையில் பா.ஜ.க. 8 இடங்களில் வெற்றிபெறும் என கூறப்படுகிறது. மேற்கு வங்காளத்தில் 5 வேட்பாளர்களில் 4 பேரை ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் முன்னிறுத்தியுள்ளது.

 

கர்நாடகா மாநிலத்தில் 4 இடங்களுக்கு 3 பேர் ஆளும் கட்சியான காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகின்றனர். ஜார்க்கண்ட் மாநிலத்தில் 2 இடங்களுக்கு பா.ஜ.க. சார்பில் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். சத்தீஷ்கர் மாநிலத்திலிருந்து ஒரு இடத்திற்கு பா.ஜ.க. சார்பில் போட்டியிடுகின்றனர். தெலுங்கானா மாநிலத்தில் காலியாக உள்ள 3 இடங்களுக்கு ஆளும் கட்சி சார்பில் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். எனவே மொத்தம் 33 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

 

மீதமுள்ள 25 எம்.பி.க்கள் உத்தரபிரதேசம், மேற்கு வங்கம், கர்நாடகா, ஜார்க்கண்ட், சத்தீஷ்கர் மற்றும் தெலுங்கானா ஆகிய 6 மாநிலங்களில் இருந்து தேர்வு செய்யப்பட உள்ளனர்.

 

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top