‘பேஸ்புக்’மூலம் ஆட்சி மாற்றம்; டிரம்ப்பை போலவே மோடியும் கேம்பிரிட்ஜ் அனலிட்டிகாவை பயன்படுத்தினாரா?

 

 

 

‘பேஸ்புக்’மூலம் ஆட்சி மாற்றம் சாத்தியம்மா என்றால் சாத்தியம் என்று சொல்வார்கள் கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா’ என்ற நிறுவனம்.ஆம் இவர்கள்தான் 2016-ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜெயிக்கவே மாட்டார் என்று திட்டவட்டமாக கருதப்பட்ட தொழிலதிபர் டொனால்ட் டிரம்ப்பை வெள்ளை மாளிகையில் குடியேற வைத்தது இந்த ஃபேஸ்புக் தகவல்கள்தான் என்றால் நம்ப முடிகிறதா?.

 

ஆம், லண்டனைச் சேர்ந்த ‘கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா’ என்ற நிறுவனம்தான் ஃபேஸ்புக்கிடம் இருந்து 5 கோடி பயனாளிகளின் தகவல்களைப் பெற்று அவர்களின் மனநிலை, உளவியல் ஆய்வுகள் நடத்தி டிரம்ப் பிரச்சாரத்தை வழிநடத்தி இருக்கிறது. அதன்படி டிரம்ப் பிரச்சாரம் செய்து, மக்கள் மனதில் செயற்கையான மாற்றத்தை உண்டாக்கி தேர்தலில் வென்றுள்ளார் என்பதுதான் லேட்டஸ்ட் தகவலாகும்.

 

இந்தத் தகவல்கள் அனைத்தையும், இங்கிலாந்தில் உள்ள சேனல் 4 தொலைக்காட்சி நிறுவனத்தின் ‘விசிலூதி’ கிறிஸ்டோபர் வெய்லி இந்த விவகாரத்தை வெளியில் கொண்டு வந்துள்ளார்.

 

கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா நிறுவனம் அலெக்சாண்டர் நிக்ஸ் என்பவர் உருவாக்கினார்.இது லண்டனைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகிறது

தேர்தல் ஆலோசனைகளையும், தொழில் நிறுவனங்களுக்கும், வணிக நிறுவனங்களுக்கும் வாடிக்கையாளர்கள், மக்களின் நடத்தைகளை ஆய்வு செய்து தகவல்களையும், மாற்றத்தையும் உண்டு செய்யும் நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் கடந்த 2013-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.

 

அதாவது கோடிக்கணக்கில், லட்சக்கணக்கில் நுகர்வோர்களின் விவரங்களை ஆய்வு செய்து, ஒழுங்குபடுத்தி, அவர்களின் நடத்தைகளை உளவியல் ரீதியாக ஆய்வு செய்து நிறுவனங்களுக்கு அளிக்கும் பணியை இது பிரதானமாகச் செய்துவருகிறது.

 

இங்கிலாந்தைச் சேர்ந்த அலெக்சாண்டர் கோகென் என்பவர் ‘குளோபல் சயின்ஸ் ரிசர்ச்’ எனும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவர் கடந்த 2014-ம் ஆண்டு ஃபேஸ்புக் நிறுவனத்தின் உதவியுடன் அமெரிக்காவில் மக்களிடம் உளவியல் ரீதியான ஒருவகையான போட்டியை நடத்தினார். பணம் செலுத்தி பங்குபெறும் இப்போட்டியில் ஏறக்குறைய 5 கோடி மக்கள் பங்கேற்றனர்.

 

இந்தத் தகவல்கள் அனைத்தையும் அமெரிக்க அதிபர் தேர்தலின் போது, கேம்பிரிட்ஜ் அனலிட்டிக்கா நிறுவனத்துக்கு , அலெக்சாண்டர் கோகென் நிறுவனம் வழங்கி இருக்கிறது. கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா நிறுவனம் மிக வலிமையான, அதிநவீன மென்பொருள் உதவியுடன் மக்களின் மனநிலையை அறிந்து பிரச்சார தளத்தை டிரம்புக்கு வகுத்துக் கொடுத்துள்ளது.

 

 இதே தந்திரத்தைத்தான், அனலிட்டிகா நிறுவனம் ஐரோப்பியயூனியனில் இருந்து இங்கிலாந்து வெளியேறவேண்டுமா என்று நடத்தப்பட்ட பிரிக்ஸிட் வாக்கெடுப்பின்போதும் கையாண்டுள்ளது எனத் தெரியவந்துள்ளது

 

இந்தியாவிலும் மோடி ஆட்சியை கொண்டுவர பாஜக இந்த நிறுவனத்தைத்தான் பயன்படுத்தியதாக சொல்லப்படுகிறது
ஆனால், சேனல் 4 நிறுவனத்தின் குற்றச்சாட்டுகளை கேம்பிர்ட்ஜ் அனலிட்டிகா நிறுவனமும், ஃபேஸ்புக் நிறுவனமும், ஆய்வு நடத்திய அலெக்சாண்டர் கோகெனும் தொடர்ந்து மறுத்து வருகின்றனர்

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top