பரோலில் வெளியே வந்தார் சசிகலா; கணவர் இறுதிச்சடங்கில்மாலை பங்கேற்கிறார்

கணவர் ம. நடராஜன் உயிரிழந்ததையடுத்து, சசிகலா சிறைச்சாலையிலிருந்து  பரோலில் வெளி வந்தார்

 

சொத்து குவிப்பு வழக்கில் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில்,  கணவர் ம. நடராஜன் உயிரிழந்ததையடுத்து, சசிகலா பரோல் கேட்க தயாரானார்

இதன்படி, பெங்களூரு பரப்பன அக்ராஹார சிறை கண்காணிப்பாளரிடம் சசிகலா தரப்பு வழக்கறிஞர்கள் பரோல் விண்ணப்பிக்கும் நடைமுறைகளை துவங்கினர். இதையடுத்து, சசிகலாவுக்கு  15 நாட்கள் பரோல் வழங்கி சிறை நிர்வாகம் அனுமதி அளித்தது. பரோல் கிடைத்ததையடுத்து, சசிகலா பெங்களூரு சிறையில் இருந்து பிற்பகல் 1.30 மணியளவில் வெளியே வந்தார். சசிகலா பரோலில் வருகை தருவதையொட்டி அவரது ஆதரவாளர்கள் சிறை வளாகம் அருகே கூடியிருந்தனர்.

 

 

பெங்களூருவில் இருந்து சாலை மார்க்கமாக சசிகலா தஞ்சாவூர் புறப்பட்டு உள்ளார். மாலை 6 அல்லது 7 மணியளவில் தஞ்சாவூருக்கு சசிகலா வந்தடைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த முறை சசிகலா பரோலில் வந்த போது, விதிக்கப்பட்ட நிபந்தனைகளே இந்த முறையும் விதிக்கப்பட்டு உள்ளது.

 

 

 

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top