ரஷ்ய அதிபர் தேர்தலில் அதிக வாக்குகள் பெற்று புதின் வெற்றி

 

ஞாயிறன்று நடைபெற்றஅதிபர் தேர்தலில் விளாடிமிர்     புதின்  வெற்றிப்பெற்றுள்ளார். அவரின் இந்த வெற்றி எதிர்பார்க்கப்பட்ட ஒன்றாகவே உள்ளது; வெற்றியை தொடர்ந்து அடுத்த ஆறு ஆண்டுகளுக்கு மீண்டும் ரஷ்யாவின் அதிபராக செயல்படுவார் விளாடிமிர் புதின்.

 

1999ஆம் ஆண்டிலிருந்து ரஷ்யாவை பிரதமராகவோ, அதிபராகவோ ஆண்டுவரும் புதின், 76 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்றுள்ளார் என அதிகாரபூர்வ முடிவுகள் தெரிவிக்கின்றன.

 

தேர்தலின் முதல்கட்ட முடிவுகளை தொடர்ந்து மாஸ்கோவில் நடைபெற்ற பேரணியில் பேசிய புதின், “கடந்த சில ஆண்டுகளாக நிகழ்த்தப்பட்ட சாதனைகளை வாக்காளர்கள் அங்கீகரித்துள்ளனர்” என தெரிவித்தார்.

 

2012ஆம் ஆண்டு தேர்தலில் பெற்ற 64 சதவீத வாக்குகளை காட்டிலும் இந்த முறை 76 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்றுள்ளார் புதின்.

 

புதினுக்கு அடுத்தப்படியாக பெரும் பணக்காரரும், கம்யூனிஸ்டுமான பாவல் குருடினின் சுமார் 12 சதவீத வாக்குகளை பெற்றுள்ளார்.

 

புதினின் பிரசாரக் குழு இது ஒரு “வியக்கத்தக்க  வெற்றி”  என   தெரிவித்திருந்தாலும் வாக்குச் சாவடிகளுக்கு அருகில் இலவச உணவுகளும், உள்ளுர் கடைகளில் தள்ளுபடிகளும் வழங்கப்பட்டன.என தெரியவருகிறது

 

வாக்குச்சாவடிகளில் எடுக்கப்பட்ட வீடியோ பதிவுகளில் ரஷ்யா முழுவதும் சில நகரங்களில் முறைகேடுகள் நடைபெறுவதாக தெரிகிறது. பல வீடியோக் காட்சிகளில் தேர்தல் அதிகாரிகள் வாக்குப்பெட்டிகளை வாக்குசீட்டுகள் கொண்டு நிரப்புவது போலவும் உள்ளது.

 

ஆனால் மத்திய தேர்தல் ஆணையத்தின் தலைவர் முறைகேடுகள் எதுவும் பதிவாகவில்லை என தெரிவித்துள்ளார்.

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top