திராவிடத்தை புறக்கணித்ததால் தினகரன் அணியிலிருந்து நாஞ்சில் சம்பத் திடீர் விலகல்

 

சிறந்த பேச்சாளர் , இலக்கியவாதி, பட்டிமன்ற பேச்சாளர் என பன்முகத்தன்மை கொண்டவர் நாஞ்சில் சம்பத்.

 

நாம் எதிர்பாராத  கருத்துக்களை அதிரடியாக பொதுவெளியில் மக்களுக்கு புரியும்படி பேசுபவர் அவருடைய  கருத்துகளால் ஈர்க்கப்பட்டதால் நாஞ்சில் சம்பத்தை கட்சியின் கொள்கைபரப்பு துணைச்செயலாளர் பொறுப்பையும்  புது இன்னோவா கார் ஒன்றையும் பரிசளித்தார் ஜெயலலிதா.

 

அதற்கு முன்னால் ‘மதிமுக’ வில் நல்ல பதவியில்தான் இருந்தார்.ஆனால் மதிமுக தலைவர் வைகோ வை விமர்சிக்காமல் நாகரிகமாக இந்த கட்சியில் இருந்து வெளியே வந்தவர் நாஞ்சில்சம்பத் என்பார்கள்

 

தனித்துவமாக , வித்யாசமாக பேசக்கூடிய  நாஞ்சில் சம்பத்.  தினகரன் அதிமுகவிலிருந்து விலகிய பின்னர் தினகரன் அணியில் நீடித்தார். ஆளுங்கட்சி மீது கடுமையான விமர்சனம் வைத்ததால் அவர் மீது வழக்கு பாய்ந்தது.

ஒரு கட்டத்தில் விரக்தியுற்ற அவர் ஒதுங்கி இருக்க ஆரம்பித்தார். அணியிலிருந்து ஒதுங்க ஆரம்பித்தார்.

 

இந்நிலையில் டிடிவி தினகரன் புதிய அரசியல் கட்சியை துவக்கினார். இதையடுத்து நேற்றிரவு இதை விமர்சனம் செய்து டிடிவி அணியிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.

 

காலம் காலமாக எந்த கொள்கையை பேசி வந்தேனோ, காலங்காலமாக எந்த கொள்கையை எங்கெல்லாம் கொண்டுச்சென்றேனோ அந்த கொள்கையை ஒரு பகலில் படுகொலை செய்துவிட்டார் தினகரன்.

இன உணர்வு கொள்கையை கொட்டிக்கவிழ்த்து விட்டார் தினகரன்.

அண்ணாவையும், திராவிடத்தையும் புறக்கணித்த இந்த பெயரில் எனக்கு உடன்பாடு இல்லை,  டிடிவி அறிவித்த கட்சி பெயரில் அண்ணாவும், திராவிடமும் இல்லை இனிமேல் அரசியல் என்ற சிமிழில் அடைப்பட்டு கிடக்க மாட்டேன். இனி எந்த கட்சிக்கொடியையும் தூக்கி சுமக்க மாட்டேன். எந்த தலைவனையும் இனி ஏற்றுக்கொள்ள மாட்டேன். இனி நான்  தனிப்பறவையாக பறப்பேன்.

 

என்னை யாரும் சமாதானம் படுத்த முடியாது. என்னை யாரும் நெருங்க முடியாது. கரையான்கள் நெருப்பை அரிக்க முடியாது.

 

என் மூளையைச் சலவை செய்ய எந்த முட்டாளும் முயல வேண்டாம். அடுத்தக்கட்டமாக இலக்கிய பணியை செய்வேன், இனி இளைஞர்களுக்கு பேச்சுப்பயிற்சி அளிக்க உள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.

 

 

.

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top