தமிழகத்திற்கான நிதியை குறைத்தது பாஜக அரசு; 14-வது நிதிக் குழு அநீதி!

நாம்,தமிழ் நாடு direct tax 44 000 நாற்பத்தி நாலாயிரம் கோடி கட்டுகிறோம். அதில் ஒரு ரூபாய்க்கு 40காசு மட்டும் நமக்கு திருப்பி தரப்படுகிறது.உபி க்கு 1ரூபாய்க்கு 1.79காசும், பீகாருக்கு 96காசும் திருப்பிதரப்படுகிறது.கேரளாவிற்கு 25 காசு மட்டும்தான் தரப்படுகிறது. மொத்தத்தில் தென் மாநிலத்திலிருந்து அதிகமாக பெற்று குறைவாக கொடுக்கிறது மத்திய அரசு.
இது GST க்குமுன்பு இருந்த நிலை.இப்போது நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட் தாக்கல் செய்யும் போது ஒன்றை சொன்னார் அது ‘’14-வது நிதிக் குழு பரிந்துரைகளால் தமிழகத்துக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது’’ என்று,அது உண்மையே! பாஜக அரசு பதவி ஏற்றதிலிருந்து தமிழகத்திற்கு வரும் நிதிதிக்கீடு மிகவும் குறைவாக இருக்கிறது பக்கத்து மாநிலங்களை விட குறைவாக இருக்கிறது .

 

14-வது நிதிக்குழு பரிந்துரைகளின்படி மாநிலங்களுக்கு இடையேயான மத்திய வரிகளின் பகிர்வில் தமிழகத்துக்கான பங்கு 4.969 சதவீதத்தில் இருந்து 4.023 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

 

இதனால், தமிழகத்தின் நிதி ஆதாரங்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றன. 14-வது நிதிக்குழு காலத்தில் மாநிலங்களுக்கான நிதிப் பகிர்வுப் பங்கு 32-லிருந்து 42 சதவீதமாக உயர்த்தப்பட்டதால் மத்திய அரசு பொறுப்பேற்கும் திட்டங்களில் தனது பங்கை கணிசமாகக் குறைத்துள்ளது. இதனால், மத்திய அரசு திட்டங்களுக்கு தமிழக அரசு தனது சொந்த வரி வருவாயில் இருந்து கூடுதலாக செலவிட வேண்டியுள்ளது.

 

ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசின் வரி வருவாய் சராசரியாக 15 சதவீதம் அதிகரிக்கிறது. அதே அளவு தமிழக அரசின் வரி வருவாயும் அதிகரித்திருக்க வேண்டும். 2015-16 முதல் 2019-20 வரையிலான 5 ஆண்டுகளில் மத்திய வரிகளில் தமிழகத்துக்கான பகிர்வு ரூ.1 லட்சத்து 59 ஆயிரம் கோடியாக இருக்கும் என 14-வது நிதிக்குழு பரிந்துரைத்தது. 13-வது நிதிக்குழுவின் பரிந்துரையோடு ஒப்பிடும்போது தமிழகத்துக்கு 121 சதவீத உயர்வே கிடைத்துள்ளது. ஆனால், கர்நாடகம் 198, மகாராஷ்டிரம் 191, ஒடிசா 166, ராஜஸ்தான் 157 சதவீத உயர்வுகளைப் பெற்றுள்ளன.

 

தமிழகம் 14-வது நிதிக்குழு பரிந்துரைத்த 121 சதவீதத்தைவிட குறைவாகவே நிதியுதவியைப் பெற்று வருகிறது. அதாவது, முதல் 3 ஆண்டுகளில் ரூ. 81,570 கோடி பரிந்துரைக்கப்பட்டிருந்த போதிலும் ரூ.72,234 கோடியே 28 லட்சம் மட்டுமே கிடைக்கும்.

 

13-வது நிதிக்குழு காலத்தோடு ஒப்பிடும்போது 14-வது நிதிக்குழு காலத்தில் 89.35 சதவீத உயர்வை மட்டுமே தமிழகம் பெற்றுள்ளது.

 

ஆனால், இந்திய அளவில் நிதிப் பகிர்வு உயர்வு சராசரி 134.02 சதவீதமாக உள்ளது. அதேநேரத்தில் கர்நாடகம் 155.14, ஒருங்கிணைந்த ஆந்திரம் 127.59, மகாராஷ்டிரம் 148.93, குஜராத் 137.70, கேரளம் 149.82 சதவீதம் உயர்வுகளைப் பெற்றுள்ளன.

 

இவ்வாறு தமிழகத்துக்கு இழைக்கப்பட்ட அநீதியை சரிசெய்யவே சிறப்பு உதவி மானியம் வழங்க தனிப்பட்ட ஒதுக்கீடு அளிக்குமாறு மத்திய அரசை வலியுறுத்தி வருகிறோம். ஆனால், மத்திய அரசிடம் இருந்து சாதகமான பதில் வரவில்லை.

 

மத்திய வரிகளில் தமிழகத்துக்கான பங்கு 2017-18-ல் ரூ.27,099 கோடியே 72 லட்சமாகும். 2018-19-ல் ரூ.31,707 கோடியே 9 லட்சமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகை உட்பட மத்திய அரசிடம் இருந்து பெறப்படும் உதவி மானியங்கள் 2018-19-ல் ரூ.20,626 கோடியே 87 லட்சமாக இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top