பாஜக வில் குழப்பம்; முக்கிய தலைவர்கள் மாநிலங்களவை தேர்தலில் புறகணிப்பு

பாஜக தனது கட்சியில் உள்ள  முக்கிய தலைவர்களுக்கு மார்ச் 23-ல் நடைபெறவுள்ள நாடாளுமன்ற மாநிலங்களவைக்கு தேர்தலில் வாய்ப்பு அளிக்கவில்லை.என செய்திகள் வருகிறது.இதன் பின்னணியில் கோஷ்டி மோதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் இருப்பதாக கூறப்படுகிறது

 

9 மாநிலங்களில் நடைபெறும் இந்தத் தேர்தலில் அருண் ஜேட்லி உள்ளிட்ட 8 அமைச்சர்களுக்கு பாஜக மீண்டும் வாய்ப்பு அளித்துள்ளது. ஆனால் ராமர் கோயில் கரசேவையில் முக்கியப் பங்கு வகித்த வினய்கட்டியாருக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்படவில்லை.காரணம் அவர் அத்வானியின் நெருங்கிய நண்பர் என்பதாகும்

 

கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், இந்தி நடிகை ரேகா, சமூக சேவகர் அனு அகா,அமைச்சர்கள்  உள்ளிட்ட 59 பேரின் மாநிலங்களவை உறுப்பினர் பதவி காலியாகும் நிலையில் இத் தேர்தல் நடைபெறுகிறது.

.

உ.பி.யில் பஜ்ரங் தளம் என்ற பெயரில் 1982-ல் ஓர் அமைப்பை நிறுவி அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் முயற்சியில் இறங்கியவர் வினய் கட்டியார் அயோத்தியின் பைசாபாத் தொகுதியில் பாஜக சார்பில் 3 முறை மக்களவை உறுப்பினராக இருந்த இவர், பிறகு மாநிலங்களவை உறுப்பினராக பதவியில் தொடர்ந்தார். இவரது பதவிக்காலம் ஏப்ரல் 2-ம் தேதி முடிவடைகிறது. இவருக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்படாததற்கு, கட்சியின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானியுடன் அவர் நெருக்கம் காட்டிவருவதே காரணமாகக் கூறப்படுகிறது.

வினய் கட்டியார், அத்வானி, முரளி மனோகர் ஜோஷி மற்றும் பலர் மீது அலகாபாத் உயர் நீதிமன்றம் ரத்து செய்த பாபர் மசூதி இடிப்பு சதி மீதான வழக்கில் கடந்த ஏப்ரலில் உச்ச நீதிமன்றம் மறு விசாரணைக்கு உத்தரவிட்டது. அப்போது இதன் பின்னணியில் சிபிஐ ஆயுதமாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக கட்டியார் புகார் கூறியிருந்தார். தற்போது உ.பி.யில் பாஜக அறிவித்த, அருண்ஜேட்லி உள்ளிட்ட 8 பேரும் கட்டியாருக்கு பிறகு கட்சிக்கு வந்தவர்கள் ஆவர்.

 

பாஜகவிற்காக தேசிய அரசியலில் பல ஆண்டுகளாக பணியாற்றி வரும் அதன் பொதுச்செயலாளர் அருண்சிங், தேசிய செய்தித் தொடர்பாளர் சுதான்ஷு திரிவேதி ஆகியோரும் வாய்ப்பை எதிர்பார்த்து ஏமாற்றம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

 

இந்தப் பட்டியலில், தேசிய பொதுச் செயலாளர்களான முரளிதர் ராவ், ராம் மாதவ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். வடகிழக்கு மாநிலங்களில் பாஜகவின் வெற்றிக்கு பின்னணியில் ராம் மாதவ் பேசப்படுகிறார். இவரை அமித்ஷா தமக்கு நிகரான போட்டியாகக் கருதுவதாகவும், இதன் காரணமாக இவருக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை எனவும் கூறப்படுகிறது.

 

தென்மாநில பாஜக பொறுப்பாளராகவும் இருக்கும் முரளிதர் ராவிற்கு கர்நாடகாவில் வாய்ப்பு அளிப்பதாக இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் இந்த வாய்ப்பு தொழிலதிபர் ராஜீவ் சந்திரசேகரால் பறிபோனது.

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top