தமிழகபட்ஜெட்- 2018 -2019: ஜிஎஸ்டி அறிமுகத்தால் வளர்ச்சி சூழல்பாதிக்கப்பட்டுள்ளது; ஓ.பன்னீர் செல்வம்

 

ஆண்டுதோறும் மார்ச் மாதத்துக்குள் வருகிற நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு, சட்டப்பேரவையின் ஒப்புதலைப் பெற வேண்டும்.அப்படி தாக்கல் செய்தால்தான் அரசின் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடும், அரசு ஊழியர்களுக்கு சம்பளமும் வழங்க முடியும்.

 

பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு மட்டும் கவர்னர் அனுமதி அளித்திருப்பதாக செய்திகள் வருகிறது.ஒட்டுமொத்த தமிழக அரசின் இயக்கமும்  மத்திய அரசின் கட்டுப்பாட்டில்  இருப்பதால் முதல்வரும் துணை முதல்வரும் மிகவும் விசுவாசமாக மத்திய அரசின் சொல்படி நடந்துகொள்கிறார்கள்.அவர்களுடைய விசுவாசம் பட்ஜெட்டில் எதிரொலிக்கும் என சொல்லப்படுகிறது

 

அதன்படி, 2018-19 நிதியாண்டுக்கான பட் ஜெட் தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படுகிறது. பட்ஜெட்டை துணை முதல்வரும் நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து வருகிறார். துணை முதல்வரான பின் அவர் தாக்கல் செய்யும் முதல் பட் ஜெட் இதுவாகும். அதேநேரம், முதல்வர் பழனிசாமி அரசின் 2-வது பட்ஜெட் இது.

 

தமிழக சட்டப்பேரவைக்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலின் உட்பட  அக்கட்சி எம்எல்ஏக்கள் கருப்பு சட்டை அணிந்து வந்தனர்.  காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கு துரோகம் இழைக்கப்பட்டுள்ளதாக கூறி கருப்பு சட்டை அணிந்து வந்தனர்.

 

காவேரியில் சரியான கவனம் செலுத்தாமல் உச்சநீதிமன்றத்தில் கோட்டை விட்டுவிட்டு இப்போது காய்ந்து கிடக்கும் விவசாயிகளுக்கு ‘உழவன்’ என்கிற செயலியை தமிழக அரசு அறிமுகப்படுத்தியிருக்கிறது செத்தவன் கையில் வெற்றிலை பாக்கு கொடுப்பதுபோல் என்று சமூக ஆர்வலர்கள் கூறுகிறார்கள்

 

அதுபோல, ஓக்கி புயலில் சிக்கிய மீனவர்களின் துயரக்கதை சொல்லி அழமுடியாதது.தமிழக அரசு மீனவர்களின் விசயத்தில் இதுவரை எந்தவிதமான நன்மையையும் செய்யவில்லை,அது தினசரி இலங்கை சிங்கள பேரினவாத கடற்படையால் தமிழக மீனவர்களை சுட்டுகொல்வதாகட்டும் ,இயற்கை பேரிடர் ஆகட்டும்.தமிழக அரசு தன்னுடைய கையாலாகாத தனத்தையே காட்டி இருக்கிறது. குறிப்பாக தற்போது ஒக்கிபுயலில் பாதிக்கப்பட்ட மீனவர்கள் தமிழக அரசு மீதும், மத்திய அரசு மீதும்  கடும் கோபத்தில்  இருக்கிறார்கள் குறிப்பாக நிர்மலா சீதாராமன் சொன்ன பொய்யான பரப்புரையால் மத்திய அரசின் மீது வெறுப்போடு இருக்கிறார்கள்.இதிலிருந்து மக்களை திசைதிருப்ப வருகிற தேர்தலில் அவர்களுடைய ஓட்டை வாங்க ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு செல்லும் மீனவர்களுக்கு உயர் அதிர்வெண் தொடர்பு கருவிகள் வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறார்கள்

 

* வரும் நிதியாண்டில் தமிழக அரசின் கடன் 3.55 லட்சம் கோடியாக இருக்கும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது

* உதய் திட்டத்தால் மின்வாரியத்திற்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.

* தமிழக அரசிற்கு ஆயத்தீர்வை மூலம் ரூ.6,998 கோடி வருவாய்

* பத்திரப்பதிவு மூலம் 10,836 கோடி ரூபாய் வருவாய்

வாகன வரி மூலம் 6,212 கோடி வருவாய் கிடைத்துள்ளது

மத்திய அரசின் மானியம் மூலம் 20,627 கோடி ரூபாய் தமிழக அரசுக்கு ரூபாய் வருவாய்

* பசுமை வீடுகள் திட்டத்தில் ரூ.420 கோடியில், 20 ஆயிரம் வீடுகள் கட்டப்படும்.

* பிரதம மந்திரி சாலை திட்டத்தின் கீழ் 25 பாலங்கள் அமைக்கப்படும்

* பள்ளிக்கல்வி துறைக்கு ரூ.27,205.88 கோடி ஒதுக்கீடு

* பழங்குடியினர் குடியிருப்புகளுக்கு இணைப்புச் சாலை திட்டம்

* கும்பகோணம் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் உள்ள பாரம்பரியமிக்க கட்டடங்கள் புதுப்பிக்கப்படும்.

தாமிரபரணி – நம்பியாறு இணைப்பு திட்டத்திற்கு 100.88 கோடி ஒதுக்கீடு

* கிண்டியில் ரூ.20 கோடியில் பசுமைப் பூங்கா தொடங்கப்படும்

2019 ஜனவரியில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்த திட்டம்

முதலீட்டு மானிம் 2 ஆயிரம் கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது

* 12,301 கோடி ரூபாயில் சென்னை சுற்றுவட்டப் பாதை மேம்படுத்தப்படும்

* நெடுஞ்சாலை துறைக்கு மொத்தமாக 11.073.66 கோடி நிதி ஒதுக்கீடு

* மாநில, மாவட்ட நெஞ்சாலைகள் 80 கோடி செலவில் மேம்படுத்தப்படும்

அத்திகடவு அவிநாசி திட்டத்திற்கு 1,789 கோடி ரூபாய்

மருத்துவ காப்பீடு திட்டத்திற்கு 1361.60 கோடி ஒதுக்கீடு

நாட்டிலேயே குழந்தைகள் இறப்பு விகிதம் குறைவான மாநிலங்களில் இரண்டாவது  இடத்தில் தமிழகம் உள்ளது.

இலவச கட்டாயக் கல்வித் திட்டத்திற்கு 200.70 கோடி ரூபாய் ஒதுக்கீடு

குமரியில் மீன் பதப்படுத்தும் பூங்கா

பள்ளிகளில் உள்கட்டமைப்பை மேம்படுத்த 333.36 கோடி ரூபாய் ஒதுக்கீடு

அணைகள் புனரமைப்புக்கு 166.08 கோடி ஒதுக்கீடு

அத்திகடவு அவிநாசி திட்டத்திற்கு 1,789 கோடி ரூபாய் ஒதுககீடு. இதற்கான அனுமதி விரைவில் வழங்கப்படும்.

ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற ரூ.20 கோடி

நிதி ஒதுக்கீடு சுகாதாரத்துறைக்கு ரூ.11,638 கோடி நிதி ஒதுக்கீடு

மாற்றுத்திறனாளிகள் சுய வேலைவாய்ப்பை ஊக்குவிக்க நிதி ரூ.10,000 இல் இருந்து 25,000 ஆக உயர்வு

சத்துணவுத் திட்டத்துக்கு சமூக நலத்துறை வாயிலாக ரூ.5,611.62 கோடி ஒதுக்கீடு

தரங்கம்பாடி அருகே 220 கோடி ரூபாயில் மீன் பிடி துறைமுகம்

2018-19 ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டில் வடசென்னைக்கான வெள்ள தடுப்பு மேலாண்மைக்கு ரூ.3,243 கோடியில் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக

ராமநாதபுரம் மாவட்டம் குத்துக்கல்லில் 70 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மீன் இறங்குதளம்

நாப்கின் வழங்கும் திட்டத்திற்கு 60.58 கோடி ஒதுக்கீடு

10 லட்சம் ஹெக்டேரில் திருந்திய நெல் சாகுபடி

நெல் சாகுபடிக்கு ஊக்கத்தொகை 200 கோடி ஒதுக்கீடு

திருமண உதவி திட்டத்திற்கு 724 கோடி ஒதுக்கீடு

சத்துணவு திட்டத்திற்கு 5,611 கோடி ஒதுக்கீடு

55.000 ஹெக்டேரில் நீடித்த நவீன கரும்பு சாகுபடி

திருநெல்வேலி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட இடங்களில் உணவு பதப்படுத்தும் பூங்காக்கள் அமைக்கப்படும்.

ஹார்டுவேர்டு பல்கலைக்கழகத்தில்  தமிழுக்காக தனி இருக்கையை ஏற்படுத்த 10 கோடி ரூபாயை தமிழக அரசு வழங்கியுள்ளது.

 

மத்திய வரிகளில் தமிழக்தின் பங்கு 31,051 கோடி ரூபாய்

வரி அல்லாத வருவாய் 11,301 கோடி ரூபாய்

மானியம் உதவித்  தொகைக்கு 75,723 கோடி ரூபாய்

 

பெரும் சவாலுக்கு இடையே  தமிழக அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது,  மாநில பொருளாதாரத்தில் நிலவும் நேர்மறையான காரணிகளால் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும்.

ஜிஎஸ்டி அறிமுகத்தால் நிச்சயமற்ற வளர்ச்சி சூழல் பாதிக்கப்பட்டுள்ளது. வரும் நிதியாண்டில் வளர்ச்சி விகிதம் 9 சதவீதமாக இருக்கும்.என ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார்

 

 

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top