இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கின்ஸ் மறைவு

ஐன்ஸ்டீனுக்குப் பிறகு மிகப்பெரிய விஞ்ஞானியாக கருதப்படும் இங்கிலாந்தைச் சேர்ந்த இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கின்ஸ் இன்று காலை மரணமடைந்தார்  . நரம்பியல் நோயால் உடலியக்கம் பாதிக்கப்பட்ட நிலையிலும், அவரின் விடாமுயற்சியின் மூலம் அனைவருக்கும் முன்னுதாரணமாக திகழ்ந்தார். இயற்பியலில் அவர் செய்த ஆராய்ச்சி அவருக்கு பல விருதுகளை பெற்று தந்தது. அவர் 76 வயதில் தனது வீட்டில் இயற்கையான முறையில் இறந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

‘காலம் ஒரு சுருக்கமான வரலாறு’ (A Brief History of Time) என்ற இவரது, நூல் உலகப்பிரசித்திப் பெற்றது இந்த புத்தத்துக்குப் பிறகே ஆஸ்ட்ரோ பிசிக்ஸ் என்னும்  கல்விப்புலம் எல்லா பல்கலைக்கழகங்களிலும் கொண்டுவரப்பட்டது

 

.அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாஸா 2014-ம் ஆண்டு ஸ்டீபன் ஹாக்கின்ஸ் விண்வெளி நிலையத்துடன் பேசிய வீடியோவைப் பகிர்ந்துள்ளது. மேலும், ஸ்டீபன் ஹாக்கின்ஸ்  ஒரு பிரசித்தி பெற்ற இயற்பியல் விஞ்ஞானியாகவும் அறிவியலின் தூதராகவும் நினைவுகொள்ளப்படுவார். என புகழ்ந்துள்ளது

 

இவரது பிறந்த நாள் ஜனவரி 9, 1942 . அந்த நாள் தான் கலிலியோவின் 300-வது இறந்த தினமாகும். இவர் மறைந்த நேற்றைய நாள் ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் 139வது பிறந்த தினம். ஆகும்

 

அவரது மறைவு அனைவரிடமும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. உலகில் உள்ள பல்வேறு தலைவர்கள் ஸ்டீபன் ஹாக்கின்ஸ் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top