வ.உ.சி. ஓர் அரசியல் பெருஞ்சொல்’ என்கிற இந்த காட்சி உரையாடலில் நான்காவது அத்தியாயத்தில் எழுத்தாளர் பெ.சு.மணி அவர்கள் உரையாடுகிறார்கள்.
பெ.சு.மணி அவர்கள் மூத்த எழுத்தாளர், திறனாய்வாளர். என்பதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியவர் .பல மத்திய, மாநில விருதுகளை பெற்றவர், எழுத்தாளர்களுக்கெல்லாம் எழுத்தாளர்.
அறிவுக்கும் சிந்தனைக்கும் பயன்தரக்கூடிய நூல்களை எழுதியவர்.’’நூலகங்களே இவருடைய வாசஸ்தலங்கள்,அறிஞருலகிலே சஞ்சாரம் செய்பவர்’’ என்று சிலம்பொலிச் செல்வர் ம.பொ.சி அவர்கள் இவரைப்பற்றி கூறுவார்.
சுதந்திரப் போராட்டத் தமிழகத்தின் வரலாற்றை பாரதியை மையமாக வைத்துக்கொண்டு பாரதியையும் அவன் வாழ்ந்த தமிழகத்தையும் பல்வேறு கோணங்களில் பார்த்தவர் பெ.சு.மணி அவர்கள்.
.
இன்று இளைஞர்கள் தெரிந்துகொள்ளவேண்டிய தமிழகத்தின் மிகப்பெரும் அரசியல் ஆளுமை வ.உ.சி. என்ற வ. உ. சிதம்பரனார்.பற்றி அவருடைய உரையாடல் இதோ…
உரையாடலை காட்சி தொடராக இளைஞர்களுக்கு வழங்க இருக்கிறோம்.பார்த்து பயன்பெற வேண்டுகிறோம்
தமிழ்ஸ்நவ்
வீடியோ இணைப்பு ;