தமிழகத்தின் குரலுக்கு மத்திய அரசு செவிசாய்க்கவில்லை – தம்பிதுரை குற்றசாட்டு

 

காவிரி மேலாண்மை வாரியம் குறித்த தமிழகத்தின் கோரிக்கைக்கு மத்திய அரசு செவிசாய்த்ததாக தெரியவில்லை என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை குற்றஞ்சாட்டியுள்ளார்.

 

உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி நாடாளுமன்ற வளாகத்தில் அதிமுக எம்பிக்கள் 7ஆவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை,
மக்களின் கோரிக்கையை நிறைவேற்றக் கோரி தொடர்ந்து போராடி வருகிறோம். காவிரி வாரியம் குறித்த தமிழகத்தின் கோரிக்கைக்கு மத்திய அரசு செவிசாய்த்ததாக தெரியவில்லை. என்று குற்றம்சாட்டியுள்ளார்.

 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம். நியாயமான கோரிக்கையை ஏற்று, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


கருத்துக்களை பகிர


அல்லது

One comment

  1. At least, I am glad to hear that you are going to continue to fight for the demands of the people. It’s very important! I am sure that http://smartessayrewriter.com/ will help you solve this issue!

Your email address will not be published.

Scroll To Top