கல்விக் கடன் தவனைக் கட்டாதவர்களிடம் தனியார் நிறுவன அடியாட்கள் வைத்து வசூல் செய்வதை அதிகாரப்பூர்வமாக பாரத ஸ்டேட் வங்கி அறிவித்துள்ளது.
பாரத ஸ்டேட் வங்கி வழங்கிய கல்விக்கடனில் திரும்பச் செலுத்தப்படாமல் உள்ள தொகையில் 50 சதவீதத்தைத் தனியார் நிறுவனத்திற்கு விற்றுவிட்டார்கள். இதனால், மொத்த கல்விக்கடன் நிலுவைத் தொகையான ரூ.1,565 கோடியில் ரூ.915 கோடி ரூபாயை ஏ.ஆர்.சி. என்ற தனியார் சொத்து மீட்பு நிறுவனம் வசூலிக்கும்.
நாடாளுமன்றத்தில் இது குறித்து தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், கல்விக்கடனுக்கான தவணையை 3 முறைக்கு மேல் செலுத்தாவிட்டால், தனியார் கடன் வசூல் நிறுவனங்கள் அவர்களிடமிருந்து கடனை வசூலிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
இரண்டு ஆண்டுகள் முன்பாக, கல்விக்கடனைத் திரும்ப செலுத்த முடியாத மதுரை அவனியாபுரத்தைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி லெனின் கடன் வசூல் செய்யும் தனியார் நிறுவனங்களின் தொல்லை தாங்க முடியாமல் தற்கொலை செய்துகொண்டது குறிப்பிடத்தக்கது.