இந்தியா-பிரான்ஸ்க்கு கிடையான கடல் பாதுகாப்பு,அணு ஆயுதம் ஒப்பந்தம் தமிழர்களுக்கு எதிரானது!

 

 

செய்திக்கட்டுரை

 

பிரான்ஸ் அதிபர் இமானு வேல் மக்ரோன் 4 நாள் சுற்றுப்பயணமாக இந்தியாவுக்கு கடந்த 9-ம் தேதி வருகை தந்தார். அவருடன் அவரது மனைவி பிரிஜித் மற்றும் அமைச்சர்கள் சிலரும் உடன் வந்திருந்தனர். டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கிய அவர்களை, பிரதமர் நரேந்திர மோடி நேரில் சென்று வரவேற்றார். இதையடுத்து, இரு நாட்டு விவகாரங்கள் குறித்து அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, இந்தியா – பிரான்ஸ் இடையே கடல் பாதுகாப்பு, அணு ஆயுதம், பொருளாதாரம், சூரிய மின்சக்தி உள்ளிட்ட பல்வேறு துறைகள் தொடர்பாக 14 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

 

பின்னர், பிரதமர் மோடியும், மக்ரோனும் ஹெலிகாப்டர் மூலமாக மிர்சாபூர் சென்றடைந்தனர். இதையடுத்து, அங்கு அமைக்கப்பட்டிருந்த சூரிய மின்சக்தி நிலையத்தை தொடங்கி வைத்தனர்.

 

அதன்பிறகு, மீண்டும் வாரணாசிக்கு வந்த அவர்கள், நீராவி இன்ஜின் படகு மூலமாக கங்கையில் பயணம் செய்தனர். அங்கு அஸ்ஸி காட்டிலிருந்து தஸ்அஸ்வமேத் காட் வரையில் சுமார் 500 மீட்டர் அவர்கள் படகில் பயணித்தனர். இந்தப் படகு சவாரியின்போது, தீனதயாள் வர்த்தக மற்றும் கலாச்சார மையத்தை அவர்கள் பார்வையிட்டனர்.

 

இதுதான் எல்லா பத்திரிக்கையிலும் வந்த செய்தி. ஆனால் இந்தியா – பிரான்ஸ் இடையே போடப்பட்டிருக்கிற ஒப்பந்தத்தின் விளைவு என்ன என்பது குறித்து எந்த பத்திரிக்கையிலும் வரவில்லை அது எவ்வாறு தமிழர்களை பாதிக்கும் என்பது குறித்து நாம் விவாதிக்க வேண்டும்

 

நான்கு நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார் பிரான்ஸ் அதிபர் மேக்ரோன். இந்த பயணத்தின் போது இந்தியா பிரான்ஸ் இடையே புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி இருக்கிறது. இதில் மிகமுக்கியமான தமிழர்கள் கவனிக்கவேண்டிய ஒன்று தமிழர்(இந்திய) பெருங்கடலை ஓட்டி போடப்பட்டிருக்கும் ஓப்பந்தம்.

 

அதாவது, தமிழர் (இந்திய) பெருங்கடலில் மேற்கில் உள்ள நாடுகளான ஜிபூட்டி, அபுதாபி, மற்றும் ரீயூனியன் தீவுகளில் உள்ள பிரெஞ்சு இராணுவ தளங்களை இந்தியா பயன்படுத்திக்கொள்ள இந்த சந்திப்பின் போது ஒப்பந்தம் கையெழுத்தாகி இருக்கிறது. அதாவது தமிழர் (இந்திய) பெருங்கடலை சுற்றி சீனாவிற்கு தற்போது பல்வேறு நாடுகளில் தளங்கள் இருக்கிறது. இதனால் சீனாவிற்கு தேவையான எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை எளிதாக மேற்காசிய பகுதிகளிலிருந்து சீனாவால் கொண்டு வந்துவிடலாம். அதேபொலவே கிழக்காசியாவிலிருந்து தங்கு தடையின்றி கொண்டு வருவதற்கு தான் சீனா தற்போது முயலுகிறது. அதனை தடுப்பதற்குதான் அமெரிக்கா ஜப்பான் ஆஸ்திரேலியா போன்ற பல்வேறு நாடுகளோடு சேர்ந்து இந்தியா முயற்சித்து வருகிறது.

அதன் முதல் கட்டம் தான் ஓமன்,ஏமன், ஜோர்டான் போன்ற பகுதிகளில் போலி புரட்சியை ஏற்படுத்தி ஆட்சியை கவிழ்த்து அமெரிக்க (மேற்குலகம்) சார்ந்த ஆட்சியை நிறுவிவிட்டார்கள். ஆனால் இதனை தொடர்ந்து கண்காணிக்க Nato படை நாடுகளால் முடியவில்லை. காரணம் அதிக நிதி இதற்கு செலவிடப்படுவதால் அமெரிக்காவில் நிதி நிலைமை மோசமடைந்து விட்டது. இதனால் அமெரிக்க உள்ளிட்ட மேற்குலக நாடுகள் தற்போது ஆசியாவிற்கான நேட்டோ படை ஒன்றை உருவாக்கி அதன் மூலம் சீனாவை கட்டுபடுத்த நினைக்கிறாரகள். இதனை மனதில் கொண்டுதான் அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த ஆண்டு நவம்பரில் 12நாட்கள் ஆசிய சுற்றுபயணத்தை மேற்கொண்டார். அதன் கடைசி நாள் மணிலாவில் உருவாக்கப்பட்ட அமைப்பு தான் “the quad”. http://www.livemint.com/…/Quad-is-a-good-idea-not-Quadplus.…

 

அமெரிக்காவின் தூண்டுதலின் பேரில் ஜப்பான் இந்தியா ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் இணைந்த இந்த கூட்டமைப்பு ஆசியாவிற்கான நேட்டோ படையாக இயங்கு வேண்டுமென்பது அமெரிக்கா கொடுத்த உத்தரவு. அதன்படி தான் இந்த கூட்டமைப்பு இயங்கி வருகிறது. http://www.scmp.com/…/us-japan-india-australia-quad-first-s…

இப்படியிருக்கும் நிலையில் கிழக்காசியாவில் இந்தியாவுக்கோ அல்லது ஜப்பான் ஆஸ்திரேலியாவுக்கோ எந்த இராணுவ தளங்களும் கிடையாது ஆனால் பிரான்சிற்கு இந்த பகுதிகளில் பல்வேறு நாடுகளில் இராணுவதளங்கள் இருக்கிறது. ஆகவே தான் இதனை பயன்படுத்திக்கொள்ள பிரான்ஸ் அதிபரை அழைத்துவந்து இந்தியா ஓப்பந்தம் போட்டிருக்கிறது. அதற்கு பதிலாக ஆபத்தான ஆறு பிரான்ஸ் அணு உலைகளை இந்தியாவில் அமைப்பதென்றும், அதிக விலைக்கு பிரான்சிடமிருந்து ரபேல் விமானத்தை வாங்குவதென்றும் மோடி ஓப்பந்தம் போட்டிருக்கிறார்.

 

ஆகவே எப்படிப்பார்த்தாலும் தமிழர்கள் செறிவாக வாழும் இந்த தமிழர்(இந்திய) பெருங்கடலை சுற்றி மிகப்பெரும் வல்லரசு மோதல்கள் நடக்கபோகிற அனைத்து வாய்ப்புகளும் இருக்கிறது. ஏனென்றால் தற்போது இருக்கிற நேட்டோ படைகளால் ஈராக் ஆப்கானிஸ்தான் கொரியதீபகற்பங்கள் என்ன நிலைமைக்கு ஆனதென்று நம் கண்முன்னே பார்த்திருக்கிறோம். அதேபோன்று நிலைமை எதிர்காலத்தில் தற்போது இரகசியமாக உருவாக்கப்பட்டிருக்கிற ஆசிய நேட்டோ படைகளாலும் உருவாக்கப்படும். அப்படி வரும் பட்சத்தில் அதில் அதிகம் பாதிக்கப்படப்போவது தமிழர்கள் தான். இந்தபிராந்தியத்திலுள்ள நாடுகளில் எல்லாம் அதிகமாக வாழுவது தமிழர்கள் தான். மேலும் மற்ற இனங்களுக்கோ காப்பாற்ற அடைக்கலம் புக நாடு என்று ஒன்று இருக்கிறது. ஆனால் தமிழர்களுக்கு அப்படியென்று இல்லை. இந்தியாவோ வழக்கம்போல செத்தால் தமிழனென்றால் கண்டுகொள்ளவே கொள்ளாது.

 

இதனையெல்லாம் கருத்தில்கொண்டு தான் மே பதினேழு இயக்கம் நடத்திய ‘வெல்லும் தமிழீழம்’ மாநாட்டில் ’தமிழர் பெருங்கடலில் நடக்கும் இராணுவ, விரிவாதிக்கப் போட்டிகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்” என்று தீர்மானம் நிறைவேற்றினார்களோ?.

 

தமிழர்களே விழிப்பாக இருப்போம் இல்லையேல் ஆடு, மாடுகள் காசாப்பு கடைகளில் பலியிடப்படுவது போல பலியிடப்படுவோம்.

 

 

கொண்டல்சாமி

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top