மகாராஷ்டிரா விவசாயிகளின் எழுச்சி நடைபயணம்;மனிதநேயத்தின் உச்சம்!

 

 

மத்திய அரசின் விவசாயிகளுக்கு எதிரான கொள்கையை கண்டித்தும்  மகாராஷ்டிரா மாநிலத்தில் விவசாயிகளின் கடன்கள் ரத்து செய்யப்படும் என்ற முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் வாக்குறுதி நிறைவேற்றப்படாததை கண்டித்தும்  நாசிக்கில் இருந்து கடந்த செவ்வாய்க்கிழமை மாலை ஆயிரக்கணக்கான விவசாயிகள் மும்பை நோக்கி பிரம்மாண்ட பேரணி தொடங்கினர்.

 

இதில் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் நடை பயணமாக மும்பை புறப்பட்டனர். வழியில் திறந்தவெளியில் படுத்து உறங்கினர். சூரிய உதயத்துக்கு முன்னர் மீண்டும் மும்பை நோக்கி நடக்க தொடங்கினர். இந்தப் பேரணிக்கு அகில இந்திய கிஸான் சபா (ஏஐகேஎஸ்) ஏற்பாடு செய்திருந்தது. இதில் பழங்குடியினத்தை சேர்ந்த ஏராளமான விவசாயிகளும் பங்கேற்றுள்ளனர்.

 

நாசிக்கில் இருந்து கடந்த 5 நாட்களாக சுமார் 180 கி.மீ. நடை பயணம் செய்து நேற்று பிற்பகல் விவசாயிகள் மும்பை வந்தடைந்தனர். அவர்கள் நேற்று இரவு முழுவதும் மும்பையில் பேரணியாக சென்றனர். மும்பையில் சட்டப்பேரவையை முற்றுகையிட்டு இன்று போராட்டம் நடத்தினர்.

 

இரவு முழுவதும் பேரணியாக வந்த விவசாயிகள், தெற்கு மும்பையில் உள்ள ஆஸாத் மைதானத்தை காலையில் வந்தடைந்தனர். அவர்களுக்கு மும்பை டப்பா வாலாக்கள் உணவும் தண்ணீரும் வழங்கினர். இதுபோலவே, மும்பை மக்கள், சமூக அமைப்பகளைச் சேர்ந்தவர்களும்,இஸ்லாமிய மக்களும் பாதுகாப்பாகவும் உணவும்  விவசாயிகளுக்கு உணவு வழங்கினர்.

 

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top