சூறாவளி காற்று வீசக்கூடும்; மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் வானிலை மையம் எச்சரிக்கை

 

 

இலங்கை அருகே நிலவும் வலுவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் வலுப்பெறக்கூடும் என்பதால், மீனவர்கள் வரும் 15-ம் தேதி வரை லட்சத்தீவு மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளில் மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது

 

பல நாட்களுக்கு முன்னே ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்ற கன்னியாகுமரி மீனவர்களுக்கு இந்த செய்தியை இந்திய கப்பல் படை தகவல் தெரிவிக்கவும் அவர்களை இந்த சிக்கலிலிருந்து காப்பாற்றவும் மீனவர்கள் வேண்டுகோள் விடுத்து இருக்கிறார்கள்.

 

ஏன்கனவே,ஓக்கி புயலில் இந்திய கப்பல் படை மீனவர்களை காப்பற்றவில்லை என்கிற குறை இருக்கிறது அதை போக்க இப்போது சரி செய்துகொள்வார்கள் என நம்புகிறோம் என ஊர் மக்கள் சொல்கிறார்கள்

 

கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் கடலுக்குள் சென்றுவுள்ள மீனவர்களுக்கு முடிந்தவரை  புயல் தகவல்களை சொல்லி கரை திரும்ப அழைப்புவிடுத்தனர். கடலுக்குள் சென்றுள்ள மீனவர்களில் ஒரு சில பேருக்கு தகவல் கிடைத்து உள்ளது. அவர்களில் சில பேர்  பாதுகாப்புடன் கரை ஒதுங்கியுள்ளனர்.

 

விசைப்படகு மீனவர்கள் ஆழ்கடலில் குறைந்தது 10 நாட்கலிருந்து 40நாட்கள் வரை   தங்கியிருந்து மீன்பிடிப்பார்கள்.  இந்தநிலையில் காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகியுள்ளதையொட்டி மீனவர்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் குளச்சலில் இருந்து மீன்பிடிக்க சென்ற விசைப்படகு மீனவர்கள் சுமார் 250க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிப்பதை பாதியிலேயே கைவிட்டு விட்டு கரை திரும்பினர்.

 

இந்த நிலையில், ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்ற கன்னியாகுமரி மீனவர்களில் சிலர் காணாமல் போனார்கள் என கூறப்பட்டது.  இந்த நிலையில், காணாமல் போன கன்னியாகுமரி மீனவர்கள் 51 விசை படகுகளில் பாதுகாப்புடன் கரை ஒதுங்கியுள்ளனர்.என செய்தி வருகிறது

 

கர்நாடகாவில் 30, லட்சத்தீவில் 16, கோவா கடற்கரையில் 5 விசைப்படகுகள் கரை ஒதுங்கி உள்ளன.  51 விசை படகுகளில் 3 இடங்களில் கன்னியாகுமரி மீனவர்கள் பாதுகாப்புடன் கரை ஒதுங்கி உள்ளனர்

 

இலங்கை அருகே இந்திய கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகியுள்ளது. இதன் காரணமாக குமரி கடல் பகுதிகளிலும் சூறாவளி காற்று வீசக்கூடும் என்றும் முட்டம், குளச்சல், தேங்காப்பட்டணம், தூத்தூர் உள்ளிட்ட 48 கடலோர கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது

 

 

 

 

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top