நாடு முழுவதும் 1,765 எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் மீது 3 ஆயிரத்து 45 கிரிமினல் வழக்குகள்

 

நாடு முழுவதும் 1,765 ..எம்.பிக்கள், எம்எல்ஏக்கள் மீது 3 ஆயிரத்து 45 கிரிமினல் வழக்குகள் நிலுவையில் இருப்பதாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்தள்ளது.அதில் பாஜக ஆளும் மாநிலத்தில் உள்ள பாஜகவினர் மீதுள்ள வழக்குகளை சேர்க்காமல் அளித்திருக்கிறது மத்திய அரசு

 

ஒட்டுமொத்தமாக 4 ஆயிரத்து 896 எம்.பி.க்கள், எமஎல்ஏக்கள் இருக்கும் நிலையில், இதில் 36 சதவீதம் பேர் மீது கிரிமினல் வழக்கு இருப்பது குறிப்பிடத்தக்கது.

 

எம்.பி., எம்எல்ஏ.க்கள் மீதான வழக்குகளை தனியாக விசாரிக்க நீதிமன்றம் அமைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, முதல் முறையாக மத்திய அரசு வழக்குகள் குறித்த விவரங்களை சேகரித்து தெரிவித்துள்ளது.

 

பாஜகவைச் சேர்ந்த வழக்கறிஞர் அஸ்வானிக் குமார் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொது நலன் மனுவில், கிரிமினல் குற்றச்சாட்டில் சிக்கி தண்டனை பெற்ற அரசியல்வாதிகளை வாழ்நாள் முழுவதும் அரசியலில் ஈடுபடுவதற்கு தடை விதிக்கக் கோரி தெரிவித்து இருந்தார்.

 

இந்த மனுவை விசாரணை செய்த நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 2 நீதிபதிகள் கொண்ட அமர்வு நாடுமுழுவதும் எம்.பி., எம்எல்ஏக்கள் மீதான வழக்கு விவரங்களை சேகரித்து, அதை விசாரிக்க ஒவ்வொரு மாநிலத்திலும் தனி நீதிமன்றம் அமைக்க அரசுக்கு உத்தரவிட்டு இருந்தார்.

 

அதன்படி, எம்.பி., எம்எல்ஏக்கள் மீதான கிரிமினல் வழக்கு விவரங்களை சேகரித்த மத்திய அரசு அதை பிரமாணப்பத்திரமாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. அதில் கூறியிருப்பதாவது:

 

ஒட்டுமொத்தமாக 4 ஆயிரத்து 896 எம்.பி.க்கள், எம்எல்ஏ.க்கள் தற்போது இருக்கிறார்கள். இதில் 1,765 எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் மீது 3 ஆயிரத்து 45 கிரிமினல் வழக்குள் நிலுவையில் இருக்கின்றன.

 

அதில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் அதிகபட்சமாக 248 எம்.பி., எம்எல்ஏக்கள் மீது 565 கிரிமினல் வழக்குள் நிலுவையில் இருக்கின்றன. 2-வது இடத்தில் தமிழகம் இருக்கிறது. இங்கு 178 எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் மீது 324 வழக்குகள் இருக்கின்றன.

 

அதைத் தொடர்ந்து பிஹாரில் 144 எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் மீது306 வழக்குகளும், மேற்கு வங்கத்தில் 139 பேர் மீது 303 வழக்குகளும், ஆந்திர பிரதேசத்தில் 132 பேர் மீது 140 வழகக்குகளும் நிலுவையில் இருக்கின்றன.

 

ஆனால், பாஜக ஆளும் மஹாராஷ்டிரா, கோவா மாநில எம்.பி.க்கள் எம்எல்ஏக்கள் மீதான வழக்கு விவரங்களை அந்த மாநில அரசுகள் தெரிவிக்கவில்லை.

 

கேரள மாநிலத்தில் 144 எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் மீது373 வழக்குகளும், டெல்லி மாநிலத்தில் 84 பேர் மீது118 வழக்குகளும், கர்நாடகாவில்82 பேர் மீது 137 வழக்குகளும் நிலுவையில் இருக்கின்றன

 

இதற்கிடையே டெல்லி அரசு 2 சிறப்பு நீதமன்றங்களையும், ஆந்திரா, பிஹார், கர்நாடகா, மத்தியப் பிரதேசம், மஹாராஷ்டிரா, தமிழகம், தெலங்கானா, உத்தரப்பிரேதம், மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களில் சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட உள்ளன. இதற்காக ரூ.78 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

 

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top