பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பொய் கூறுகிறார்; சமூக ஆர்வலர்கள் கருத்து!

குரங்கணி மலைப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்கும் பணி ஹெலிகாப்டர் மூலம் நடைபெற்று வருவதாக, மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

 

தேனி மாவட்டம் போடி அருகே குரங்கணி மலைப்பகுதியில், ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட காட்டுத்தீயில், அங்கு மலையேற்றத்திற்காகவும், சுற்றுலாக்காகவும் சென்ற மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் சிக்கினர். காட்டுத்தீயில் சிக்கியவர்களை மீட்க கோவை மாவட்டம் சூலூரிலிருந்து விமானப்படை ஹெலிகாப்டர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தார்.

 

காட்டுத்தீ விபத்தில் சிக்கி இதுவரை 9 பேர் உயிரிழந்ததாக தேனி மாவட்ட ஆட்சியர் மரியம் பல்லவி பல்தேவ் அதிகாரப்பூர்வமாக தெரிவித்தார். இவர்களுள் சென்னையை சேர்ந்தவர்கள் 6 பேர் என்பதும், ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் 3 பேர் என்பதும் தெரியவந்துள்ளது.

 

இந்நிலையில், டெல்லியில் இன்று (திங்கள்கிழமை) செய்தியாளர்களை சந்தித்த நிர்மலா சீதாராமன் கூறியதாவது :

“நள்ளிரவு 3 மணிக்கு 16 கமாண்டோக்கள் குரங்கணி மலைப்பகுதிக்கு சென்று காயமடைந்தவர்களுக்கு உதவினர். இரவு நேரத்தில் சிலர் மீட்கப்பட்டனர். தற்போது, காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடலை ஹெலிகாப்டர் மூலம் மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. மலைப்பகுதியிலிருந்து உடல்களை கீழே கொண்டு வருவதில் 2 ஹெலிகாப்டர்களும், தீயை அணைப்பதில் ஒரு ஹெலிகாப்டரும் ஈடுபட்டுள்ளன. மலை செங்குத்தாக இருப்பதால் கீழே இறங்கி மீட்பு பணி மற்றும் காப்பாற்றுவதில் சிறிது சிரமம் ஏற்பட்டுள்ளது” என தெரிவித்தார்.

 

ஆனால், உண்மை நிலவரம் அவ்வாறு இல்லை வனப்பகுதியை சுற்றிலும் தீ எரிந்து கொண்டிருந்ததால், சம்பவ இடத்தை தெரிந்து கொள்ள முடியாமல் வட்டமடித்தபடியே இருந்தது. இதனால் ஹெலிகாப்டர் மூலம் மீட்பு பணியில் ஈடுபடுவதில் சிக்கல் ஏற்பட்டது.

 

விமானப்படையினரின் தத்தளிப்பை புரிந்து கொண்ட தேயிலை தோட்ட தொழிலாளர்களும்  வனத்துறையினரும் சேர்ந்து மக்களையும் குழந்தைகளையும் காப்பற்றி இருக்கிறார்கள்.

 

இப்படிதான் கன்னியாகுமரி மாவட்டத்தில்  ஒக்கிபுயல் அடித்த போது மீனவர்களை இந்திய விமானப்படை கடலில் சென்று காப்பற்றியது என்று ஒரு பொய்யை கூறினார்.மீனவர்கள் எவ்வளவு கெஞ்சியும் விமானப்படை கடலுக்குள் சென்று தேடுதலை நடத்தவில்லை.பொறுமையிழந்த மீனவர்கள் தாங்களே கடலுக்குள் சென்று 42 மீனவர்களுக்கு மேல் காப்பற்றினார்கள்.ஆனால் கடைசிவரை நிர்மலா சீதாராமன்  இந்திய விமானபடை காப்பற்றியது என்று சொல்லிக்கொண்டே இருந்தார். இப்போதும் அதுபோலவே காட்டுத்தீயில் சிக்கி இருந்தவர்களை விமானப்படை ஆய்வு மேற்கொள்ளும். கோவை மாவட்டம் சூலூரில் இருந்து விமானப்படை விமானங்கள் அங்கு விரைந்து சென்று காப்பற்றியது என்று வாய் கூசாமல் பொய்சொல்கிறார் என்று சமூக ஆர்வலர்கள் கூறுகிறார்கள்

 

கடலில் தத்தளித்த மீனவர்களை மீனவர்களே காப்பற்றியது போல் காட்டுத்தீயில் சிக்கியவர்களை அங்குள்ள தொழிலாளர்களும் வனத்துறையினருமே காப்பற்றினார்கள்  என்பதுதான் உண்மை. தமிழர்கள் விசயத்தில் நிர்மலா சீதாராமன் அடிக்கடி இதுமாதிரி பொய்களை  கூறுவது வாடிக்கையாகி வருவது வருந்ததக்கது என்று சமூக ஆர்வலர்கள் கூறுகிறார்கள்

 

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top