காவிரியில் மாசு கலந்த நீரை கர்நாடகா திறந்துவிடுகிறது: மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம்

 

கர்நாடகாவில் இருந்து மாசு கலந்த கழிவு நீரை காவிரி ஆற்றில் தமிழகத்துக்கு திறந்துவிடப்படுவதாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

 

கர்நாடக அரசு காவிரி நீரில் மாசு கலந்த கழிவு நீரை தமிழகத்துக்கு திறந்து விடுகிறது. காவிரியில் கழிவு நீர் திறந்துவிடுவதை தடுக்கக் கோரி தமிழக அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

 

இதை விசாரித்த உச்ச நீதிமன்றம் காவிரியில் மாசு கலந்த கழிவு நீர் கலப்பது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யும்படி மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு உத்தரவிட்டது.

 

இதையடுத்து மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் நேற்று தாக்கல் செய்த இடைக்கால அறிக்கையில் கூறியிருப்பதாவது:

 

பெங்களூருவில் உள்ள தொழிற்சாலைகள் மற்றும் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் சிற்றாறுகளின் மூலம் காவிரி நதியில் கலக்கிறது. இந்த மாசு கலந்த கழிவு நீரை கர்நாடக அரசு காவிரி ஆற்றின் மூலமாக தமிழகத்துக்கு திறந்துவிடுகிறது இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 

மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் இந்த அறிக்கையால், காவிரியில் கழிவு நீர் கலப்பதை தடுக்கும் வழக்கில் தமிழகத்துக்கு சாதகமான சூழல் உருவாகியுள்ளது

 

ஆனால், தமிழக அரசு எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்க மத்திய அரசை நாடவேண்டியதிருக்கிறது. காவேரியில் கழிவு நீர் கலப்பது அப்பட்டமாக தெரிந்தும் பொறுமை காப்பது ஏற்றுக்கொள்ளமுடியாதது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top