‘அர்ஜுன் ரெட்டி’ புகழ் விஜய் தேவரகொண்டா நடிக்கும் ‘நோட்டா’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

‘அர்ஜுன் ரெட்டி’ புகழ் விஜய் தேவரகொண்டா நடிக்கும் ‘நோட்டா’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

2017-ம் ஆண்டு வெளியான ‘அர்ஜுன் ரெட்டி’ புகழ் விஜய் தேவரகொண்டா நடிக்கும் தமிழ்ப் படத்திற்கு ‘நோட்டா’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

தெலுங்கில் வெளியான ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தின் மூலம் பிரபலமானவர் விஜய் தேவரகொண்டா. இவர், தமிழில் தனது முதல் படத்தை துவங்க இருக்கிறார். ‘அரிமா நம்பி’ மற்றும் ‘இருமுகன்’ படத்தை இயக்கிய ஆனந்த் ஷங்கர், இந்தப் படத்தை இயக்குகிறார். ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ படத்தின் நாயகி மெஹ்ரீன், விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக நடிக்கிறார். சாம் சி.எஸ். இசை அமைக்கிறார். சந்தன கிருஷ்ணன் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்தப் படத்தை, ஸ்டுடியோ க்ரீன் சார்பில் கே.இ.ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இதன் பூஜை, ஹைதராபாத்தில் உள்ள ராமநாயுடு ஸ்டுடியோவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது.

இந்நிலையில், இந்தப் படத்துக்கு ‘நோட்டா’ எனத் தலைப்பு வைத்துள்ளனர். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று விஜய் தேவரகொண்டா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார். ‘நோட்டா’ என்பது, தேர்தலின்போது வேட்பாளர்கள் யாருக்கும் வாக்களிக்க விருப்பம் இல்லை என்றாலும் தன் வாக்கைப் பதிவுசெய்ய கொடுக்கப்பட்ட ஒரு வழிமுறை. எனவே, இந்தப் படம் அரசியல் சார்ந்ததாக இருக்கும் என்று தெரிகிறது.

படத்தின் இயக்குனர் ஆனந்த் ஷங்கர் கூறுகையில், இந்த படம் விஜய் தேவரகொண்டாவின் முந்திய படங்களான காதல் படங்கள் போல் இருக்காது சற்று வித்தியாசமான படமாக இது இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top