சமத்துவமின்மைக்கு எதிராக நேற்று ஸ்பெயினில் லட்சக்கணக்கான பெண்கள் வேலை நிறுத்த போரட்டம்

உலகமெங்கும் நேற்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. இந்த நாளில், ஸ்பெயின் நாட்டில் பாலின சமத்துவமின்மை, பணியிடத்திலும் வீட்டிலும் சமத்துவமின்மை, கலாச்சாரம் மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறைக்கு எதிராக முன்னெப்போதும் இல்லாத அளவில் பெண்கள் வேலை நிறுத்த போராட்டத்தை நடத்தினர். இந்த 24 மணி நேர வேலை நிறுத்தத்துக்கு 10 தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்திருந்தன.

 

இரு முக்கிய தொழிற்சங்கங்கள், CCOO மற்றும் UGT தரப்பில் இருந்து கூறியதாவது, மதிய நேரத்திற்குள்ளாகவே எங்களின் வேலைநிறுத்த போராட்டம் “பெரும் வெற்றியாக” அமைந்துவிட்டது, நாடு முழுவதும் 53 லட்சம் பெண்கள் போராட்டம் துவங்கி மூன்று முதல் இரண்டு மணி நேரத்திற்குள் ஒன்று திரண்டுவிட்டனர். மேலும், இவர்கள் 24 மணிநேர போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

 

நூற்றுக்கணக்கான பெண்கள் ஸ்பெயினின் தெருக்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்களுடன் இணைந்து ஸ்பெயின் அரசுக்கு எதிராக கோசங்களை எழுப்பினர். “நாங்கள் நிறுத்தினால், இந்த உலகம் விடும்” என்று கோசங்களை எழுப்பினர்.

 

இந்த மிக பெரிய போராட்டத்தில் உலக புகழ் பெற்ற ஸ்பெயின் நாட்டின் நடிகை பெனிலோப் குருசும் பங்கேற்றார். தனது நிகழ்ச்சிகளை அவர் ரத்து செய்தார். இந்த வேலை நிறுத்தத்துக்கு அங்கு 82 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்து உள்ளதாக கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன. 76 சதவீதம்பேர் ஆண்களை விட பெண்கள் சிரமப்படுவதாக தெரிவித்து உள்ளனர்.

 

சமத்துவயின்மைக்கு எதிராக பெண்கள் முன்னெடுத்த இந்த போராட்டத்தில் பொது போக்குவரத்து நாடு தழுவிய அளவில் இருந்தாலும் போராட்டத்தின் காரணமாக சேவைகள் குறைக்கப்பட்டன, இரயில் மற்றும் விமானசேவையும் பாதிப்புக்குள்ளானது.

 

மாட்ரிட், பார்சிலோனா, பில்பாவோ, வாலென்சியா என்று ஸ்பெயின் நாட்டின் அனைத்து நகரங்களிலும் இந்த போரட்டம் நடந்தது. இந்த பேரணி 200 ஸ்பானிஷ் இடங்களில் முன்னணியில் இருந்தன.

“நான் சர்வாதிகாரத்தின் கீழ் வசித்து வந்தேன், நான் ஜனநாயகத்தில் வாழ்ந்தேன், நாங்கள் அதிகமான முன்னேற்ற பாதையில் செல்லவில்லை”, ஆசிரியர் கோஞ்சா நோவெர்ஸ்ஸ் தெரிவித்தார்.

 

பெண்ணியக் குழுக்கள் பெண்களின் போரட்டம் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை காட்ட வேண்டும் என்று விரும்புகின்றன, ஆனால் ஸ்பெயினின் சட்டம் ஒற்றை பாலின வேலைநிறுத்தங்களுக்கு அனுமதிமருகிறது. மேலும், பெண்களின் போராட்டத்தை ஆதரிப்பதற்காக ஆண்கள் வரவேற்கப்படுகிறார்கள்.

 

பெண்கள் முன்னெடுத்த இந்த போராட்டத்தில் அவர்கள் கோரிக்கையாக முன்வைத்தது மார்ச் 8 ஆணையம் வேலை நிறுத்த அறிக்கையாகும். அதன் அறிக்கயில் “பாலியல் ஒடுக்குமுறை, சுரண்டல் மற்றும் வன்முறை ஆகியவற்றிலிருந்து ஒரு சமூகம் விடுபட வேண்டும்” என்றும் “மோசமான பணி நிலைமைகளை நங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம், ஆன், பெண் செய்யும் அதே வேலைக்கு ஆண்களை விட பெண்களுக்கு குறைவான சம்பளம் வழங்கப்படுவதை ஏற்கமுடியாது” என்று அறிக்கையில் தெரிவித்து இருந்தனர்.

ஸ்பெயினில் ஆண்களை விட பெண்கள் பொதுத்துறையில் 13 சதவீதமும், தனியார் துறையில் 19 சதவீதமும் குறைவாக சம்பளம் பெறுவது குறிப்பிடத்தக்கது.

 

வீடுகளிலும், வேலை இடங்களிலும் இந்த சமத்துவம் இல்லாத நிலைதான், ஸ்பெயின் பெண்களின் போராட்டத்திற்கு துவக்கமாக அமைத்துள்ளது.

 

இவர்களது வேலை நிறுத்தம் காரணமாக ஸ்பெயினில் நேற்று 300 ரெயில்கள் ஓடவில்லை. சுரங்க வழி ரெயில் சேவையும் பாதிப்புக்கு ஆளானது.

 

சர்வதேச மகளிர் தினத்தன்று ஸ்பெயினில் தொழிற்சங்க பெண்களின் பாலின சமத்துவமின்மை மற்றும் பாலியல் பாகுபாடு ஆகியவற்றை இலக்காகக் கொண்ட முன்னெடுக்கப்பட்ட இந்த வகையான வேலைநிறுத்த போரட்டம் உலகம் முழுவதும் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top