அணுஆயுதம் குறித்து வடகொரியா அதிபர் கிம் ஜாங்கை சந்திக்க டொனால்டு டிரம்ப் ஒப்புதல்

கொரியா பிராந்தியத்தில் அமெரிக்கா தொடர்ந்து தனது பொருளாதார நலன்களுக்குகாக ராணுவ ஆக்கிரமிப்பு நடத்திவருகிறது. அமெரிக்காவின் இந்த அக்கிரபிப்புக்கு ஜப்பான் மற்றும் தென்கொரியா நாடுகள் உதவி புரிந்து வருகின்றன எதனால் கொரியா பிராந்திய மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நங்கள் அணு ஆயுத சோதனை மேற்கொள்கிறோம் என்று வடகொரியா தெரிவித்தது. இதைத்தொடர்ந்து வடகொரியா பல முறை அணு ஆயுத ஏவுகணை சோதனைகளை நடத்தியது.

வடகொரியா அடுத்தடுத்து அணு ஆயுத, ஏவுகணை சோதனைகளை நடத்தியதால் கொரிய தீபகற்பகத்தில் போர் மேகம் சூழ்ந்தது. அமெரிக்கா வலியுறுத்தல் மூலம் ஐ.நா வடகொரியா மீது பொருளாதார தடைகளை விதித்தது. இதனை பொற்படுத்தாமல் வடகொரியா அமெரிக்காவின் ஆதிக்கத்திற்கு துணைபோகும் தென் கொரியா, ஜப்பான் போன்ற நாடுகளையும் எச்சரித்தது.

வடகொரியாவின் இந்த செயல் பசிபிக் பிராந்தியத்தில் அமெரிக்காவின் பொருளாதார நலன்கள் பாதிக்கும் நிலை ஏற்பட்டது ஆதலால் அமெரிக்கா வடகொரியா மீது தொடர் பொருளாதார தடைகளை விதித்தது. அமெரிக்காவின் இந்த பொருளாதார தடைகள் வடகொரியாவை சற்று பாதித்தது மேலும், அமெரிக்கா இந்த பிராந்தியத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுவிட்டாள் போர் பதற்றம் ஏற்படாது என்று தெரிவித்தது.

கொரியா பிராந்தியத்தில் அமைதி நிலவ தென் கொரியா உடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்தன.எனினும் தென்கொரியாவில் அண்மையில் நடந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் போர் பதற்றத்தை தணித்தன.

கடந்த திங்கட்கிழமையன்று தென் கொரிய பிரதிநிதிகள் கிம்மை வடகொரியாவில் சந்தித்தனர். இந்தச் சந்திப்பு குறித்து கிம்,“தென்கொரியா, வடகொரியா இடையே நெருக்கமான நட்பு தொடர வேண்டும்” என்று தெரிவித்தார்.

இந்த நிலையில் வடகொரிய அதிபர் கிம் உடனான சந்திப்பு குறித்து அமெரிக்கா அதிபர் ட்ரம்பிடம் தென்கொரிய அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.

இதுகுறித்து வெள்ளை மாளிகையில் தென்கொரிய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சங் உய் யங் கூறும்போது, ” கிம் அணு ஆயுதங்களை நீக்கம் செய்ய ஒப்புக் கொண்டிருக்கிறார் என்பதை ட்ரம்பிடம் தெரிவித்தோம். வடகொரியா அதிபர் கிம்மை சந்திப்பது குறித்து நாங்கள் டிரம்பிடம் ஆலோசித்தோம்.

கிம்மை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பும் கூறியுள்ளார். ட்ரம்பை சந்திக்க மிகுந்த ஆர்வமாக இருப்பதாக கிம் தெரிவித்திருக்கிறார்” என்று தெரிவித்தார்.

இதுகுறித்து ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில்,”அணு ஆயுதங்களை நீக்கம் செய்வது பற்றி தென்கொரியப் பிரதிநிதிகளுடன் கிம் பேசியுள்ளார். அது வெறும் நிறுத்திவைப்பு மட்டுமல்ல. இந்தக் காலகட்டத்தில் வடகொரியா எந்தவித ஏவுகணை சோதனைகளையும் நடத்தாது.

நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ஆனால் இது தொடர்பாக ஒப்பந்தம் எட்டப்படும் வரை அந்நாட்டின் மீதான பொருளாதாரத் தடைகள் நீடிக்கும். கிம்மை சந்திப்பது குறித்து திட்டமிடப்பட்டு வருகிறது,” என்று குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப்பு மற்றும் வடகொரியா அதிபர் கிம் ஜோங் உன் சந்திப்பு வரும் மே மாதம் நடக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top