சமூக பிரச்சினைகளுக்காக பெண்கள் போராட வேண்டும் – சமூக போராளி இரோம் ஷர்மிளா

தூத்துக்குடியில் உள்ள தூய மரியன்னை மகளிர் கல்லூரியில் நேற்று நடைபெற்ற சர்வதேச மகளிர் தின விழாவில் சிறப்பு விருந்தினராக இரோம் ஷர்மிளா கலந்து கொண்டார். பெண் உரிமை தொடர்பாக மாணவியரின் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. அதன் பின்னர், இந்த விழாவில் இரோம் ஷர்மிளா குறித்து அருட்தந்தை சாகேஷ் எழுதிய புத்தகம் வெளியிடப்பட்டது.

தூய மரியன்னை மகளிர் கல்லூரி மாணவ, மாணவிகள் முன் இரோம் ஷர்மிளா பேசியதாவது:-

நான் வெறும் பெண்ணிய போராளி அல்ல. சமூகத்தின் அனைத்து பிரச்சினைகளுக்காவும் போராடி வருகிறேன்.

அண்மை சில காலங்களாக பெண்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்துவிட்டன. இந்த வன்முறைகளுக்கு எதிராக பெண்கள் துணிச்சலுடன் போராட வேண்டும். தமிழ்நாட்டில் சுமங்கலி திட்டம் என்ற பெயரில் இளம் பெண்களின் வாழ்க்கை சுரண்டப்படுகிறது.

தனியார் நிறுவனங்களால் இயற்கை வளங்கள் பாதிக்கப்படுகின்றன. இதுபோன்ற சமூகப் பிரச்சினைகளுக்காகவும் பெண்கள் போராட வேண்டும்.

இவ்வாறு இரோம் ஷர்மிளா பேசினார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top